ஆடுகளம், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் “அசுரன்”. இந்த படம் “வெட்கை” என்ற நாவலின் அடிப்படையை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். கலைப்புலி எஸ். தாணு அவர்களின் தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்து உள்ளார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், பசுபதி,பாலாஜி, சக்திவேல், சுப்ரமணிய சிவா, யோகி பாபு, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

இந்த அசுரன் படக்கதை 80களில் ஆரம்பித்து 60க்கு பயணித்து மீண்டும் 80களில் முடியும் கதை. இந்த படத்தில் ஜாதி மோதல், குடும்பத்தை பழிக்குப்பழி, காதல் என அழகாக கதையை கொடுத்து உள்ளார் இயக்குனர். இந்த படத்தில் நரேன் குடும்பத்திற்கும், சிவசாமி (தனுஷ்) குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து கொண்டு வருகிறது. இந்த படத்தில் தனுஷ் 40 வயதிற்கு மேற்பட்ட சிவசாமி கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். தனுஷ் மனைவியாக மஞ்சு வாரியர், திருமண வயதில் இருக்கும் மூத்த மகன் முருகன் (அருணாசலம்), பள்ளிக்குச் செல்லும் இளைய மகன் (கென்), சிறு மகள், மச்சான் பசுபதி என அழகான குடும்பம்.

இதையும் பாருங்க : என் அம்மா தடுத்தும் அடம் பிடித்து விஜய்யுடன் நடித்தேன். பிரண்ட்ஸ் பட நடிகை பேட்டி.

Advertisement

நரேனின் பழிவாங்கும் குணத்தால் தன் குடும்பத்தை காப்பாற்ற தனுஷ் அசுர வேட்டை ஆடுகிறார். அதோடு எல்லாரிடமும் இருந்து எல்லாத்தையும் வாங்கி கொள்ளலாம் ஆனால், ஒருவரின் அறிவை என்றும் திருட முடியாது டயலாக் மூலம் தெறிக்க விட்டார் என்று சொல்லலாம். அசுரன் படத்தில் தனுஷ் நடித்த சிவசாமி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் 130 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

இந்நிலையில் தனுஷின் அசுரன் படத்தை தெலுங்கில் “நரப்பா” என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது. தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் பிரபலமான நடிகர் வெங்கடேஷ் அவர்கள் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிகை ப்ரியாமணி அவர்கள் நடிக்கிறார். அசுரன் என்ற டைட்டில் நரப்பா என்று வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை தெலுங்கில் ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்குகிறார். அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி தாணுவே இந்த படத்தையும் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு மணிசர்மா இசை அமைக்கிறார்.

Advertisement

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை பார்த்து தமிழ் ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். இதை பார்த்து ரசிகர்கள் எல்லாரும் சோசியல் மீடியாவில் பலவிதமாக விமர்சனம் செய்தும், கிண்டலும், கேலியும் செய்தும் வருகிறார்கள். தெலுங்கில் இருந்து பல படங்கள் தமிழில் ரீமேக் ஆகுவதும், தமிழில் இருந்து பல படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகுவதும் வழக்கமான ஒன்று. அந்த வகையில் அசுரன் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

Advertisement

தற்போது இந்த நியூஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது ஆனால், அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கை கிண்டல் செய்யும் தமிழ் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெலுங்கு ரசிகர்களும் தமிழ் நடிகர்களையும் தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட பல்வேறு தமிழ் படங்களையும் கிண்டல் செய்து பல்வேறு மீம்களை பரப்பி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக விஜய் படங்கள் தெலுங்கில் இருந்து ரீ-மேக் செய்யப்பட்டதை எல்லாம் தெலுங்கு ரசிகர்கள் சுட்டிகாட்டி வருகிறார்கள்.

Advertisement