ஒரு இன்ஜினீயர் சிவன் ஆன கதை இதான்! – சிவன் சசிந்தர்!

0
2850
sasinthar-tamil-kadavul-muruga
- Advertisement -

தமிழ் கடவுள் முருகன் என்ற பக்தித் தொடரை ஒளிபரப்பி சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது விஜய் டிவி.

தில் சிவன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் சசிந்தர். இவர் இதற்கு முன் ‘வம்சம்’ உள்பட நடித்த இரண்டு சீரியல்களிலுமே வில்லன். வில்லன் எப்படி சிவனானார் என்று கேட்டோம். சிரித்தபடி பேசத்தொடங்குகிறார் சசிந்தர்.
sasindharசிந்தர், நடிகனானது எப்படி..?
செங்கல்பட்டில்தான் நான் படிச்சது வளர்ந்தது எல்லாமே. ஸ்கூல் முடிச்சதும் என் நண்பர்கள் எல்லோருமே இன்ஜினீயரிங் சேர்ந்தாங்க. எனக்கு இன்ஜினீயரிங் படிக்கிறதுக்கு ஆர்வம் இல்லை. ஆனாலும் நானும் அவங்களோட சேர்ந்து படிச்சேன். கோர்ஸ் முடிஞ்சு வேலைக்குப் போகிற நேரத்தில்தான், இது எனக்கான துறை இல்லைனு தெரிஞ்சுக்கிட்டேன். பிறகு ஹைதராபாத்தில் ஃப்லிம் மீடியா கோர்ஸ் முடிச்சேன். நான் படிச்சது டைரக்‌ஷனுக்குதான். ஆனா சேஞ்ச் ஓவர்ல நடிகனாகிட்டேன். ‘வம்சம்’தான் நான் நடிச்ச முதல் சீரியல். அதே டைம்லதான் ‘தென்பாண்டி சிங்கம்’ சீரியலையும் நடிச்சேன். இரண்டிலும் வில்லன் ரோல்தான்.

முன்ன நடிச்ச இரண்டு சீரியல்களிலும் வில்லன். இப்ப சிவன். எப்படி இருக்கு இந்த ஃபீல்..?
இதுக்கு முன் பண்ணின சீரியல்களில் ஹைடெசிபல்ல கத்திக்கிட்டு, கொலை பண்ணிக்கிட்டு இருக்கிற மாதிரி நடிச்சேன். அப்ப எல்லோரும் என்னைத் திட்டிட்டே இருப்பாங்க. என் நண்பர்கள் வீடுகள்லயும் என்னைத் திட்டுறதா சொல்லியிருக்கிறாங்க. ஆனா, சிவன் ரோல் பண்ணும்போது ரொம்ப பெருமையா இருக்கு.

- Advertisement -

நான் இதுவரை பண்ணின வேடங்களில் இது ரொம்ப வித்தியாசமா இருக்கு. ‘ரொம்ப அமைதியா பேசணும், ஓவர் ஆக்ட் பண்ணக்கூடாது’னு நிறைய புது அனுபவங்கள் இருக்கு. இந்த சீரியல் பார்த்ததுக்கு அப்பறம் சில பெண்கள் என்கிட்ட, ‘நாங்க உங்களை திட்டிட்டு இருந்தோம். ஆனா இப்போ எங்களை கையெடுத்து கும்பிட வச்சுட்டீங்க’னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது.
sasindharசிவனா எப்படித் தயாரானீங்க?
கந்த புராணத்தை மையமா வச்சுதான் இந்த சீரியல் எடுக்குறாங்க. அதுனாலையே நான் கந்த புராணத்தை முழுசா தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். சின்ன வயசில நிறைய கதைகள் கேட்டிருப்போம். அதையும் தாண்டி சிவன் என்பவர் யார், அவர் எப்படிப்பட்ட கடவுள்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். ‘சிவன் ரொம்ப கோபக்காரர், யாரையும் மன்னிக்க மாட்டார்’னு நான் அதுவரை அவரைப்பற்றி நினைச்சிருந்தது எல்லாம் பொய்னு பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன்.

இந்த ரோல்ல நான் கமிட்டாகும்போது வில்லன் ரோல் பண்ண 100 கிலோவா எடை கூடியிருந்தேன். ஆனால் சிவன் ரோலுக்காக உடனடியா 16 கிலோ எடை குறைச்சேன். அதுபோக சிவனை மையமா வெச்சு எடுக்கப்பட்ட வின்டேஜ் படங்களை எல்லாம் பார்க்க ஆரம்பிச்சேன். அது கொஞ்சம் உதவியாக இருந்தது.
sasindharசில வாய்ப்புகள் வருது. ஆனா, ஒரு வெயிட்டான ரோலுக்காக வெயிட் பண்றேன். சின்னச்சின்ன ரோல்கள் பண்றதுல எனக்கு விருப்பம் இல்லை. கண்டிப்பா டைரக்டர் ஆகுறதுதான் என் எதிர்காலத் திட்டம். அதுவரைக்கும் நடிக்கிறதை ஜாலியா பண்ணலாம்னு இருக்கேன்.

Advertisement