தமிழ் படம் 2 திரைவிமர்சனம்.!

0
684

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் “தமிழ் படம் 2 ” இன்று (ஜூலை 12) வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா என்று ஒரு சிறய விமர்சனத்தை கொஞ்சம் அலசலாம்.

tamizh padam

தமிழ் சினிமாவில் வெளியான அணைத்து ஹீரோக்களின் படங்களையும் கலாய்த்து வெளியான “தமிழ் படம் ” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 வருடங்கள் கழித்து நடிகர் சிவா மற்றும் இயக்குனர் சி எஸ் அமுதன் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தான் தமிழ் படம் 2″.

இந்த படடத்தின் முதல் பாகத்தில் கையாண்ட அதே யுத்தியை இந்த படத்திலும் கையாண்டு உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி கமல் துவங்கி நடிகர் சிவகார்த்திகேயன் வரை அணைத்து ஹீரோக்களின் படங்களையும் கலாய்த்து இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் சி எஸ் அமுதன். அதிலும் குறிப்பாக அஜித் படத்தை கொஞ்சம் ஓவராகவே கிண்டல் செய்துள்ளார் இயக்குனர்.

tamil padam

இந்த படத்தில் போலீஸ் அதிகாரியான சிவா தனது மனைவியை தனது மனைவியை கொன்ற தீவிரவாதியை பழி வாங்குவது தான் முக்கிய கதையாக உள்ளது. இதில் சர்வதேச தீவரவாதியாக காமெடி நடிகர் சதீஷ் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஒரு பிரச்னைகளை தான் காமெடியாக இந்த படத்தில் எடுத்துள்ளனர்.

இந்த படத்தில் கதைக்கு பெரிதாக முகிழ்க்கியம் துவம் கொடுக்கவில்லை. அதற்கு மாறாக தமிழ் படங்களில் வரும் ஹீரோக்களின் கதாபாத்திரத்தை கலாய்த்து எடுக்கப்பட்ட காமெடி காட்சிகளின் தொகுப்பாக தான் இந்த படம் இருக்கிறது. இந்த படத்தின் முழு பாரத்தையும் சிவா ஒருவரே தாங்கி பிடித்து வருகிறார். தமிழ் ஹீரோக்களையும் தாண்டி சில அரசியல்வாதிகளையும் கலாய்த்துள்ளனர்.

siva

படம் முழுக்க அனைவரயும் கலாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் ஒரு சில கட்டத்தில் “அட போங்கைய்யா” என்று காமெடியில் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இருப்பினும் சிவா அணைத்து காட்சிகளையும் அழகா பேலன்ஸ் செய்துள்ளார். இந்த படத்தில் பாடல்கள் எதற்கு என்று தான் தெரியவில்லை. படத்தின் பாடல்களை இயக்குனர் அவர் நினைக்கும் இடத்தில் எல்லாம் போட்டுள்ளார். மொத்தத்தில் இந்த படத்தை காமெடி விரும்பிகள் பார்க்கலாம். ஆனால், லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது.

இந்த படத்திற்கு BEHINDTALKIES அளிக்கும் மதிப்பு 3.5/5