வெற்றி துரைசாமி இறப்பு, நதிகளில் ஏற்படும் மரணம் குறித்து பாக்யராஜ் வெளியிட்ட வீடியோ – தமிழ் நாடு அரசின் Fact Check குழு பதிலடி.

0
529
- Advertisement -

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவை அடுத்து நதிகள் ஏற்படும் மரணம் குறித்து இயக்குனரும் நடிகருமான பாக்ய ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகரின் முன்னாள் மேயர் துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பின் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருகிறது. கடந்த பிப்ரவரி நான்காம் தேதி இமாச்சல் பிரதேசத்தின் இன்னவோர் மாவட்டத்தில் உள்ள வாங்கி நாளா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வெற்றி துரைசாமியின் கார் விபத்துக்குளானது.

-விளம்பரம்-

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உயிரிழந்த நிலையில் வெற்றி துரைசாமியின் நண்பர் கோபினாத், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். வெற்றி துரைசாமியின் உடல் மட்டும் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது அவரது உடலை மீட்புக்குழிவினர் தேடி வந்தனர். இப்படி ஒரு நிலையில்  வெற்றி துரைசாமியின் சடலம் 9 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெற்றியின் உடல், சட்லஜ் நதியில் 6 கி.மீ தொலைவில் கிடைத்துள்ளது.

- Advertisement -

வெற்றி துரைசாமியின் உடல் நேற்று (பிப்.13) சென்னை கொண்டுவரப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நதிகள் ஏற்படும் மரணம் குறித்து இயக்குனரும் நடிகருமான பாக்ய ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர் ‘கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அம்பாரம்பாளையம் எனும் ஆற்றுக்கரையில் நதிகளில் மூழ்கி பலர் இறந்து உள்ளனர்.

உடலை மீட்டு தர கூறி உறவினர்கள் கேட்கும் போது அதற்கு ஏற்றவாறு பேரம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கி விடுவார்கள் என்றும் பாக்யராஜ் அந்த வீடியோவில் பேசி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாக்யராஜ் இந்த பேச்சில் உண்மை இல்லை என்று தமிழ்நாடு அரசின் உண்மை சரி பரப்பு குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் ‘திரு,பாக்யராஜ் அவர்களின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றதாகும். அப்படி சம்பவம் என்று ஒன்றுகூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை.

-விளம்பரம்-

பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் 2022, 2023ல் எவ்வித உயிரிழப்பு சம்பவமும் நடக்கவே இல்லை.2022ல் பவானி ஆற்றில் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆகும். இதனையடுத்து தேசிய, மாநில பேரிடர் மீட்புப்படையால் பயிற்சிபெற்ற 10 காவலர்களை உள்ளடக்கிய, ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான ‘மேட்டுப்பாளையம் உயிர் காக்கும் காவல் படை’ 2023 பிப்ரவரியில் உருவாக்கப்பட்டுள்ளது.

பஇதன் விளைவாக, 2023ல் வானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்தது. 2024ல் உயிரிழப்புகளே இல்லை. இப்படை, ஆற்று வெள்ளப் பெருக்கிலிருந்து 914 பேரை அப்புறப்படுத்திக் காப்பாற்றியுள்ளது. 13 பேரை தற்கொலையிலிருந்து காப்பாற்றி, மன நல ஆலோசனைவழங்கியிருக்கிறது.பவானி ஆற்றங்கரையில் 19 அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு, எச்சரிக்கைப் பலகைகள், சிசிடிவி கேமரா, ரோந்து ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளன. எனவே, மேற்கண்ட தகவல் பொய்யானதும் வதந்தியும் ஆகும். இவற்றை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச் செயல்கள் ஆகும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement