தமிழ் படம்-2 இரண்டு நாட்களில் இத்தனை கோடி வசூலா.! அதிர்ச்சியில் முன்னணி நடிகர்கள்.!

0
1055
Tamizh-Padam

இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் “தமிழ் படம் 2 ” கடந்த வியாழக்கிழமை (ஜூலை 12) வெளியாகி இருந்தது. ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பையும் பெற்றுள்ளது.

tamizh padam

கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் அணைத்து ஹீரோக்களின் படங்களையும் கலாய்த்து வெளியான “தமிழ் படம் ” ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 வருடங்கள் கழித்து நடிகர் சிவா மற்றும் இயக்குனர் சி எஸ் அமுதன் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தான் தமிழ் படம் 2.

இந்த படம் சுமார் 10 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று குறைப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வெளியான முதல் நாளில் சென்னையில் மட்டும் 1 கோடி ருபாய் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகம் முழுவதும் இரண்டு நாளில் இந்த படம் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான “கடைக்குட்டி சிங்கம்” படமும் நேற்று (ஜூலை 13) தான் வெளியாகி இருந்தது. அப்படி இருந்தும் “தமிழ் படம் 2” கான ரசிகர்கள் திரையரங்குகளில் குறையாமல் காணப்டுகின்றனர்.