தமிழில் 2010 ஆம் ஆண்டு முழு நீள காமெடி படமாக வெளிவந்த படம் ” தமிழ் படம் “. புதுமுக இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்திருந்தார். லாஜிக் இல்லா காமெடியால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் படம் பாகம் 1- இல் பல்வேறு தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் செய்த பல்வேறு மாஸ் சீன்களை செம கலாய் கலாய்த்திருப்பார் நடிகர் சிவா.
இந்த படத்தில் சிவாவின் ஜோடியாக நடித்தவர் நடிகை திஷா பாண்டே.மாடல் அழகியான இவர் 2009ஆம் ஆண்டு இந்தியில் வெளியான போலோ ராம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பின்னர்தான் இவர் தமிழ் படம் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானார். தமிழ் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் இந்த படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்பு அமையவில்லை.
இந்த படத்திற்கு பின்னர் இவர் நித்தின் சத்யா ஹீரோவாக நடித்த மயங்கினேன் தயங்கினேன் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அதன்பின்னர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என்று ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இறுதியாக லொள்ளு சபா ஜீவா நடித்த கொம்பு என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
தமிழ் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ் படம் 2 என்ற பெயரில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது . ஆனால், இந்த படத்தில் திஷா பாண்டேவுக்கு பதிலாக ஐஸ்வர்யா மேனன் நாயகியாக நடித்து இருந்தார். ஆனால், முதல் பாகத்திற்கு கிடைத்த அளவி இரண்டாம் பாகத்திற்கு வரவேற்பு கிடைகவில்லை.