ஒரே கல்லில் கோடீஸ்வரரான நபர். படையப்பா பாணியில் நடந்த உண்மை சம்பவம்.

0
1055
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே வேற லெவல் பட்டையை கிளப்பி இருக்கிறது. இவருடைய திரை பயணத்தில் முக்கிய படங்களில் ஒன்றாக அமைந்தது படையப்பா. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் படையப்பா. இந்த படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், நாசர், மணிவண்ணன், அப்பாஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இன்றும் படையப்பா படம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. இந்த படத்தில் ரஜினி அவர்கள் தன்னுடைய சொத்தையெல்லாம் இழந்து தன்னுடைய அப்பா கடைசியாக வைத்திருந்த கிரானைட் கல் மூலம் மிகப்பெரிய கோடிஸ்வரர் ஆகுவார். இந்நிலையில் படையப்பா படத்தில் நடந்த சம்பவம் நிஜத்திலும் ஒருவர் வாழ்க்கையில் நடந்துள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : திடிரென்று ரசிகருக்கு கிஸ் கொடுத்த அமலா பால். அப்படி என்ன அவர் சொன்னார்னு பாருங்களே. வீடியோ இதோ.

- Advertisement -

படையப்பா படத்தில் நடந்த சம்பவம் ஒன்று டான்சானியா தேசத்தில் நடந்துள்ளது. டான்சானியாவில் வசித்து வருபவர் தான் Saniniu Laize. இவர் சுரங்கம் ஒன்று வைத்திருக்கிறார். இந்த நிலையில் Saniniu Laize தனது சுரங்கத்தில் கிடைத்த டான்சைட் எனப்படும் உயர் ரக கல்லை அரசாங்கத்திடம் விற்று லட்சாதிபதி ஆகியுள்ளார்.

இந்திய மதிப்பில் இந்த கல் சுமார் 3 மில்லயன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 22 கோடி விலை போயுள்ளது. மேலும், இந்த பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் ஒரு பள்ளிக்கூடத்தை கட்டுவேன். அப்போது தான் இங்கிருப்பவர்கள் எளிதில் வந்து படிக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த அளவிற்கு நல்ல உள்ளம் படைத்த Saniniu Laize செயலைப் பார்த்து பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement