ரஸ்னா விளம்பரத்தில் நடித்த குழந்தைக்கு நடந்த சோகம் ! வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன்

0
1230
taruni (2)

விளம்பரங்கள் என்றாலே பிரபலங்களை விட குழந்தைகள் நடிக்கும் விளம்பரமே அதிகம் எடுக்கப்படுகிறது. நாம் சிறு வயதில் பார்த்த ஒரு சில தயாரிப்புகளின் விளம்பரங்களை நாம் கண்டிப்பாக மறக்க மாட்டோம் அப்படிப்பட்ட தயாரி ப் புகளான ரஸ்னா,கோல்கேட் போன்ற விளம்பரங்களில் நடித்த சிறுமி தான் தருணி சச்சிதேவ்.

rasna-girl

1998 இல் மே மாதம்14 தேதி மும்பையில் பிறந்த இந்த சிறுமி விளம்பரங்களில் நடித்து பின்னர் டீவி தொடர்கள் போன்றவற்றில் நடித்துள்ளார்.2004 இல் வெளியான வெள்ளிநட்சத்திரம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத்துவங்கினர்.அதன் பின்னர் 2009 இல் ஹந்தியில் வெளியான பா என்ற படத்தில் அமித்தாபட்சனுடம் நடித்துள்ளார்.

இந்த சிறுமி 2009 சன் டிவி யில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற மெகா சீரியலில் சுமினி குட்டி என்ற சிறுமியாக நடித்துள்ளார்.
2012 இல் நேபாளத்தில் நடந்த ஓரு விமான விபத்தில் சிறுமி தருணி மற்றும் அவரது தாய் இருவரும் பரிதாபமாக உயிர் இழந்தனர்.இதில் சோகமான விஷயம் என்னவென்றால் அவர் இறந்த நாள் அவரது பிறந்த தினமான மே 14 அன்று தான்.

Dharani

தருணி இருப்பதற்கு முன்பாக விமான நிலையத்தில் தனது நண்பர்களிடம் இது தான் நாம் சந்திக்கப்போகும் கடைசி சந்திப்பு என கூறியுள்ளார். மேலும் விமானத்தில் சென்ருக்கொண்டு இருக்கும் போது தனது தோழி ஒருவருக்கு தனது செல்போனில் இருந்து ஒரு குறும் செய்தியை அனுப்பியுள்ளார் .அதில் ஒரு வேலை நான் செல்லும் இந்த விமானம் விபத்துக்குள்ளானால் என்னவாகும் என்று விளையாட்டாக ஒரு தகவளை அனுப்பியுள்ளார். ஆனால் உண்மையாகவே அந்த விமானம் விபத்துக்குள்ளாகி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.