அஜித் போல விஜய் கிட்ட இந்த திறமை இருக்கு ! துப்பாக்கி நடிகை சஞ்சனா ஓபன் டாக்

0
886

தமிழ் சினிமாவில் 43 வயதை கடந்த பின்பும் இன்றும் பிட்டகா ஒரு இளைஞர் போல தோற்றமுடையவர் தான் இளைய தளபதி விஜய்.அதனால் தான் இந்த தலைமுறையில் கூட பெண் ரசிகர்கள் இவருக்கு மிகவும் அதிகம்.பல நடிகர் நடிகைகள் கூறுகையில்,விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் அமைதியாக இருப்பார் யாரிடமும் பேசமாட்டார் என கூறியுள்ளனர். ஆனால்,டேக் என்று சொன்னவுடன் அவர் அப்படியே மாறி நடிப்பை தெரிக்கவிடுவார் என்று பலர் கூறியிருக்கிறார்கள்.

Actress sanjana sarathy

ஆனால் உண்மையில் நடிகர் விஜய் அப்படி இல்லை, அவர் நன்றாக பேசுவார் ,குரம்புத்தனமும் செய்வர் என்று துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சஞ்சனா கூறியுள்ளார்.ஏ.ஆர்.முரகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் விஜய்க்கு இரு தங்கைகளில் ஒருவராக நடித்தவர் தான் சஞ்சனா. சமீபத்தில் பேட்டியளித்த இவர் அந்த ஷீட்டிங்கின் போது நடந்த ஒரு ஜாலியான சம்பவத்தை கூறியுள்ளார்.

விஜய் சாரை எல்லாரும் மிகவும் அமைதியான நபர்,யாரிடமும் பேச மாட்டார் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல அவர் நன்றாக பேசுவார்.நான் துப்பாக்கி ஷூட்டிங்கில் இருந்த போது விஜய் சாரை சந்தித்தேன் அவர் தான் என்னிடம் முதலில் வந்து நான் தான் விஜய் என்று அறிமுகபடுத்தினார்.நான் மிகவும் ஷாக்காகி ஐயோ சார் உங்களை போய் தெரியாமல் இருக்குமா என்று கூறினேன்.விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரத்துடன் வந்து விட்டுவார். அவர் கார்,பைக் எல்லாம் நன்றாக ஓட்டுவார் .ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு எனது அம்மாவும் வந்திருந்தார் ஒரு காட்சியில் விஜய் என்னை பைக்கில் அழைத்து செல்வது போன்று காட்சி அமைந்திருந்தது.அப்போது எனது அம்மா அவளுக்கு பைக்கை என்றால் பயம் என்று மிகவும் பயந்தார்.

sanjana sarathy

இதனை கேட்ட விஜய் நான் பைக்கில் உட்கார்ந்த பின்னர் என்னை விழவைப்பது போன்று ஒரு இஸ்டண்ட் ஒன்றை செய்து எனது அம்மாவை விளையாட்டாக பயமுரித்தினார்.அவர் கூறுகையில்,விஜய் அண்ணா நல்லா பைக் ஓட்டுவார். விஜய் சார் மிகவும் குரும்புகாரர் என்று சஞ்சனா தெரிவித்தார்.