‘ஒரு 10 லட்சம் தாங்க’ இருக்க சொல்ல உதவாம, செத்ததுக்கு அப்புறம் மால போட்டு என்ன பயன் – காமெடி நடிகர் ஆதங்கம்.

0
279
- Advertisement -

சேசுவின் இந்த நிலைமைக்கு பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் தான் காரணம் என்று டெலிபோன்ராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் சேசு இறப்பு குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக இருந்தவர் லொள்ளு சபா சேசு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சேசு.

-விளம்பரம்-

இவர் வெள்ளி திரையில் மட்டும் இல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவர் விரைவில் குணமடைந்து வருவார் என்று கூறப்பட்டது. பின் சில தினங்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி நடிகர் சேசு காலமாகி விட்டார். இவருடைய மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலருமே இவருடைய மறைவிற்கு இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

டெலிபோன் ராஜ் பேட்டி:

இது ஒரு பக்கம் இருக்க, சேதுவிற்கு 10 லட்சம் கொடுத்து ஆப்ரேஷன் செய்திருந்தால் அவர் கண்டிப்பாக பிழைத்திருப்பார் என்று சோசியல் மீடியாவில் செய்திகள் பரவி இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக சேசுவின் நண்பரும், நடிகருமான டெலிஃபோன் ராஜ் பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர், நான் சேசு உடைய நண்பர். அவருக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்திருந்தால் கண்டிப்பாக அவர் உயிரோடு இருந்திருப்பார். உயிருடன் இருக்கும் போது யாருமே உதவி செய்ய வரவில்லை.

தமிழ் சினிமா மீது வைத்த குற்றச்சாட்டு:

இறந்த பிறகு ஓரமாக நின்று சோகமாக முகத்தை வைத்து விட்டு சென்று விடுகிறார்கள். எதற்கு இதை செய்ய வேண்டும்? பிரபலமான நடிகர்கள், இயக்குனர்கள் யாரும் உதவி செய்யவில்லை. சேசு அவர்கள் பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். அவர்கள் மனது வைத்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு உதவி செய்திருக்கலாம். ஆனால், யாருமே செய்யவில்லை. உதவி குறித்து நாங்களும் எல்லாரிடமும் கேட்டோம் 100, 500, என்று பிச்சை போடுகிறார்கள். பெரிய நடிகர்கள் இயக்குனர்கள் நினைத்திருந்தால் அந்த 10 லட்சம் ரூபாய் பத்து நிமிடத்தில் கொடுத்திருக்கலாம்.

-விளம்பரம்-

சந்தானம் குறித்து சொன்னது:

சொல்லப்போனால், அவருடன் சேர்ந்து நடித்த சந்தானமும் சேசுவுக்கு நல்ல நண்பர். பல ஆண்டு காலமாக தெரியும். அவர் மனதை வைத்திருந்தால் அவரே கொடுத்திருக்கலாம். இன்று சேசு உயிருடன் நம்மோடு இருந்திருப்பார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு இதுதான் நிலைமை. இதனால் பல பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இது நீடித்துக் கொண்டே தான் இருக்கும். இன்னும் பல பேர் இப்படிதான் இறப்பார்கள். ஏன் நானே கூட இந்த நிலைமையில் தான் இறப்பேன். இதற்கு நடிகர் சங்கம் தான் சரியான முடிவு எடுக்க வேண்டும்.

சேசு குறித்து சொன்னது:

மேலும், சேசு வருமானத்தில் இன்சூரன்ஸ் போட்டு வைத்திருந்தால் அவருக்கு இந்த நிலைமை வந்திருக்காது. ஆனால், அவரால் போட முடியவில்லை. அதற்கு காரணம் ஷூட்டிங் நாட்கள் தள்ளிக் கொண்டே இருந்தது, சம்பளமும் இல்லை. மாதத்தில் பத்து நாள் தான் வேலை இருக்கும். மீதி நாள் வேலையே இருக்காது. இதை வைத்து அவர் என்ன சேர்த்து வைத்து போட முடியும். அவர் பல பேருக்கு உதவி செய்திருக்கிறார். கல்யாணம், படிப்பு செலவு என்று பல உதவிகளை செய்திருக்கிறார். ஆனால், கடைசி காலத்தில் அவருக்கு உதவ ஒருவர் கூட முன்வரவில்லை. அவரை இந்த நிலைமையில் பார்ப்பது நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.

Advertisement