ரஜினி மகளை தொடர்ந்து ரிஸ்க் எடுக்கும் லைகா? விஜய் மகன் தேர்ந்தெடுத்து இருக்கும் கதை அப்படி.

0
746
- Advertisement -

உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தளபதி விஜய். இவர் தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செயது. இருக்கிறது. ஆனால், இறுதியாக இவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

தளபதி விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு ஒரு சின்ன டான்ஸ் ஆடியிருப்பார் சஞ்சய். அதனை தொடர்ந்து சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்து உள்ளார். ஜேசன் சஞ்சய் கனடாவில் ஃபிலிம் மேக்கிங் படிப்பு படித்து வருகிறார். ஜேசன் சஞ்சய் ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து. இதுவரை இவர் ஜங்க்ஷன், சிரி, ‘Pull The Trigger’ என்ற சில குறும்படங்களை இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் மகன் சஞ்சய் தனது முதல் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. லைகா நிறுவனம் இதுவரை 2.0, பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்து இருக்கிறது. . அதே போல லைகா நிறுவனத்தில் முதல் படமே விஜய்யின் ‘கத்தி’ திரைப்படம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் படமே இப்படி பிரம்மாண்ட பேனரில் விஜய் மகனுக்கு வாய்ப்பு கிடைத்து இருப்பதை எண்ணி கோலிவுட் வட்டாராமே மிகந்த வியப்பில் ஆழ்ந்து இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்போவதாகவும் அதற்கான ஸ்க்ரிப்ட் வேலையில் சஞ்சய் தீவிரமாக இறங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் கிரிக்கெட்டை மையமாக வைத்து பல படங்கள் வந்து இருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ‘லால் சலாம்’ படம் வெளியாகி இருந்தது. இந்த படமும் கிரிக்கெட்டை மையமாக வைத்தே எடுக்கப்பட்டு இருந்தது. அதே போல சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படமும் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு ஏன் விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு கூட கிரிக்கெட்டை வைத்து இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார். ஒரு வேலை அவருடைய ஐடியாவாக இது இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இந்த படத்தில் நடிக்க போகும் நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் நாகனாகவும், ஷங்கர் மகள் அதிதி நாயகியாகவும் நடிக்கப்போவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதே போல படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் மகன் ஏ ஆர் அமீன் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் இது முழுக்க முழுக்க வாரிசு நடிகர்களின் படமாக அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement