நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி மு க மாபெரும் வெற்றிபெற்றதன் மூலம் முதல் முறையாக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலினின் செயல்பாடுகள் பல்வேரு பிரபலங்களால் பாரட்டப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் ஸ்டாலினின் ஆட்சித் திறனை பாராட்டி பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் போட்ட பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்று 10 ஆண்டுகள் கழித்து ஆட்சியில் அமர்ந்துள்ளது தி மு க.
அதிலும் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஸ்டாலின். இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்தே பல்வேரு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டமன்ற கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், சட்ட மன்றத்தில் பேசும் போது தன்னை பற்றி புகழ்ந்து பேசி நேரத்தை வீணாக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வர வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையும் பாருங்க : பாத்தே ரொம்ப நாள் ஆச்சி எப்படி இருக்கீங்க – குழந்தை பிறந்த பின் சயீஷா வெளியிட்ட முதல் புகைப்படம்.
ஸ்டாலினின் இந்த பேச்சு பலரின் கவனத்தை ஈர்த்த நிலையில் ஸ்டாலினை பாராட்டி பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான பவன் கல்யாண் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்ப்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் அரசியல் செய்ய வேண்டும்.
ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது. அதை வார்த்தைகளால் அல்ல, செயல்பாடுகளால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்களது ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது.உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறிப்பிட்டுள்ளார்.