தல59 படமே வராத நிலையில் ‘தல 60’ படத்தின் கதாநாயகி பற்றி வெளியான தகவல்.!

0
1218
thala-60

அஜித்தின் ‘விஸ்வாசம்’ தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு அடுத்ததாக அஜித், இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தில் பணிபுரியும் கலைஞர் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது படத்தின் தயாரிப்பு நிறுவனம். அதன்படி இந்த படத்தில் இப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வித்யா பாலன் ஆகியோர் பலரும் நடிக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் தான் மீண்டும் நடிக்கவுள்ளார். அந்த படத்தையும் இயக்குனர் வினோத் குமார் தான் இயக்கவிருக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் ஜூலை மாதம் துவங்க உள்ளது.

மேலும், இப்படத்தை 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் அஜித் 60 படத்தில் நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிசுகிசுக்கபட்டு வருகிறது. நடிகை ராகுல் ப்ரீத் சிங் ஏற்கனவே வினோத் குமார் இயக்கிய ‘தீரன்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement