அஜித் இதுவரை நடித்த 4 விளம்பரங்களை பார்த்துள்ளீர்களா? ஒரே வீடியோவில் இதோ.

0
51319
ajithad
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித். இவரது திரைப்படம் வெளியாகும் என்று சொன்னாலே போதும் தியேட்டர்கள் முன்னாடி திருவிழா போன்று ரசிகர்கள் கூட்டம் அலைமோதும். அந்த அளவிற்கு கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது.

-விளம்பரம்-

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் மீண்டும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். அஜித்குமார் சினிமாத்துறையில் மட்டுமில்லாமல் கார் ரேஸ், மாடல், துப்பாக்கி சுடுதல்,பைக் ரேஸ் ஆகியவற்றிலும் அதிகம் ஆர்வம் உள்ளவர்.

இதையும் பாருங்க : வேட்டையாடு விளையாடு 2 வை உறுதி செய்த கௌதம் மேனன் – ஜோதிகாவிற்கு பதில் யார் தெரியுமா?

- Advertisement -

தல அஜித் அவர்கள் சினிமா உலகிற்கு வருவதற்கு முன் மாடலிங் தான் செய்து இருந்தார். இவர் அடிப்படையிலேயே ஒரு சிறந்த மாடல். ஆரம்ப காலத்தில் தல அஜித் அவர்கள் விளம்பரங்களில் நடித்து வந்தார். அதில் வரும் வருமானத்தை வைத்து தான் இவர் பைக் ரேசில் ஈடுபட்டு வந்தாராம்.

இந்நிலையில் தல அஜித் ஆரம்பகட்ட காலத்தில் நடித்த விளம்பர படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது. அதிலும் அவர் வேட்டி விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அது ஒரு செகண்ட் வந்து செல்லும் காட்சி. தற்போது அந்த விளம்பர வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
ajith

சொல்லப்போனால் தல அஜித் வேஷ்டி அணிந்து செய்த விளம்பரத்தை பார்த்து தான் ஆசை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். இந்த விளம்பரம் மட்டுமில்லாமல் தல அஜித் அவர்கள் ஆரம்ப காலங்களில் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக தான் தல அஜித் அவர்கள் எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. விளம்பரத்தின் மூலம் தான் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.

இதையும் பாருங்க : படத்தில் தான் வில்லன். ஆனால், நிஜத்தில் ஹீரோ. கொரோனா பாதிப்புக்கு இவர் செய்த உதவியை பாருங்க.

நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார். தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. மிகவும் ரகசியமாக ஷூட்டிங்கை நடத்தி வருகின்றார் இயக்குனர். இந்த வலிமை படத்தில் தல அஜித் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். மேலும்,தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார்.

Advertisement