அஜித் நடிக்க மறுத்த படத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆன இரண்டு படங்கள். என்ன படம் தெரியுமா?

0
58069
Vijay-Ajith
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் மிகப் பிரபலமானவர்கள் என்று சொன்னால் தல அஜித்தும், தளபதி விஜய்யும் சொல்லலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு அவர்களுக்கு ரசிகர்கள் உள்ளார்கள். இவர்கள் இருவருக்கும் தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். அது எல்லாருக்குமே தெரியும். தமிழ்நாட்டில் எந்த இடத்திற்குச் சென்றாலும் ‘தல, தளபதி’ ரசிகர்களை பார்த்து விடலாம். ஏன்னா, அந்த அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் ‘தல, தளபதி’ ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்த்– கமலஹாசனுக்கு பிறகு நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய் தான். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

-விளம்பரம்-
Ajith

கடந்த ஆண்டு கூட தளபதி, தல நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,வசூலையும் பெற்று தந்தது. படம் வசூலில் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக் கொண்டு முறியடிப்பார்கள். இந்நிலையில் தல அஜீத் அவர்கள் நடிக்க மறுத்த படங்கள் எல்லாம் வேற நடிகர்கள் நடித்து சூப்பர் ஹிட் ஆனது. அந்த வகையில் தல நடிக்க மறுத்த இரண்டு படங்களில் தளபதி விஜய் நடித்து அந்த படம் மெஹா ஹிட் ஆனது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாக பரவி வருகிறது. தல அஜித் அவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவர் நடிக்க மறுத்த பல படங்களில் வேறு நடிகர்கள் நடித்து மாபெரும் ஹிட்டாகி இருந்தது.

- Advertisement -

பெரும்பாலும் தல அஜித் அவர்கள் நடிக்க மறுத்த படத்தில் அதிகமாக நடித்தது நடிகர் சூர்யா தான். அஜித் அவர்கள் நடிக்க முடியாத படங்களில் சூர்யா நடித்ததனால் அவருடைய திரையுலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அந்த வகையில் அஜீத் நடிக்க மறுத்து சூர்யா நடித்த படங்கள் காக்க காக்க, நந்தா, கஜினி, நேருக்கு நேர். இந்த படங்களின் மூலம் சூர்யா அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானர். அதே போல் தல அஜித் அவர்கள் நடிக்க மறுத்த இரண்டு படங்களில் தளபதி விஜய் நடித்து சூப்பர் ஹிட் ஆகி உள்ளது. அது என்ன படம் தெரியுமா? அந்த படங்கள் கில்லி, கத்தி ஆகியவை தான். இந்த படங்களில் நடிக்க முதலில் அஜித் அவர்களிடம் தான் பேச்சு வார்த்தை நடந்தது.

vijay-ajith

ஆனால், இந்த இரண்டு படங்களும் பேச்சு வார்த்தையோடு நின்று விட்டது. அதன் பிறகு தான் தளபதியிடம் கதை சொல்லி ஒப்பந்தம் வாங்கினார்கள். பின் தளபதி விஜய் நடித்து இந்த இரண்டு படங்களும் பெரிய அளவில் ஹிட்டானது. அதுமட்டும் இல்லாமல் விஜயின் திரை உலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் கில்லி தான். அந்த படத்திற்கு பிறகு தான் இவருக்கு சினிமா உலகில் பல பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. இந்த படங்களை தவற விட்டதை நினைத்து தல ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-
Advertisement