அல்டிமேட் ஸ்டார் அஜித் கடந்த சில ஆண்டுகாளாகவே எந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கோ, பாராட்டு விழாவிற்கோ கலந்து கொள்வது இல்லை. அவ்வளவு ஏன் தனது படத்தின்வெட்டிஇசை வெளியிட்டு விழாவிற்கோ, வெற்றி விழாவிற்கோ கூட அஜித் கலந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இறுதியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கலைஞர் பாராட்டு விழாவின் போது நேரடியாக இனி தங்களை பொது நிகழ்ச்சிக்கோ, அரசியல் நிகழ்ச்சிக்கோ நடிகர்களை வற்புறுத்துகிறார்கள் என்று பேசிய வீடியோ பெரும் வைரலும் ஆனது.
அதன் பின்னர் அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கும் கலந்துகொள்வது இல்லை. இந்நிலையில் இத்தனை ஆன்டுகள் கழித்து நடிகர் அஜித் ஸ்ரீதேவிக்காக தனது கொள்கையை தளர்த்துள்ளார். ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24 ஆம் தேதி அனுசரிக்கபடுகிறது.
இதற்கு முன்பாக சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் இன்று ஸ்ரீதேவிக்கு திதி அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். பின்னர் மாலை ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றார் அஜித்.
அப்போது அஜித்துடன் சிலர் புகைப்படங்களை எடுத்தனர்.
இதில் அஜித் ஹாலிவுட் நடிகர் Hugh Jackman போல் இருப்பதாக இரண்டையும் ஒப்பிட்டு ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். தற்போது இந்த பபுகைப்படம் சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.