எப்படி இருக்கிறது ‘தலைவி’ – முழு விமர்சனம் இதோ.

0
7025
thalaivi
- Advertisement -

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரக்கனி உட்பட பல நடிகர்கள் நடிப்பில் தற்போது வெளிவந்த படம் தலைவி. இந்த படத்தில் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். எந்த ஒரு சர்ச்சையும், கலவரமும் இல்லாமல் தலைவி படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் விஜய். தற்போது இந்த படத்தின் திரைவிமர்சனத்தை வாங்க போய் பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

- Advertisement -

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வந்திருக்கும் படம் தான் ‘தலைவி’. படத்தில் ஜெயலலிதா அவர்கள் தன் பள்ளிப் படிப்பைத் தொடங்கி பின் திரை உலகத்தை நோக்கி வந்து பிறகு அரசியலில் நுழைந்து முதலமைச்சராக நாட்டை ஆண்ட பாதை வரை என அனைத்தையும் இயக்குனர் விஜய் அழகாக சொல்லி இருக்கிறார். இது வரலாற்று படம் என்பதால் படத்தில் முழுமையான விஷயங்களையும், எந்த ஒரு கற்பனை இல்லாமல் தந்துள்ளார். சிறிய வயதிலேயே தந்தையை இழந்த ஜெயலலிதா கடுமையான பணம் நெருக்கடியினால் தன்னுடைய பள்ளிப்படிப்பை விட்டு சினிமா துறைக்கு நுழைகிறார்.

பின் தன்னுடன் இணைந்து நடித்த எம்ஜிஆருடன் நல்ல நட்புறவு கொள்கிறார். அதற்கு பிறகு எம்ஜிஆரின் மீதிருந்த அன்பால் அவர் கட்சிக்குள் நுழைகிறாள். ஜெயலலிதா அவர்கள் கட்சிக்குள் நுழையும் போது ஏற்பட்ட அவமானங்கள், அரசியலில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் ஆகியவற்றை படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். மேலும், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் கச்சிதமாக நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி கலக்கியுள்ளார்.

-விளம்பரம்-

அச்சு அசலாக எம்ஜிஆர் ஆகவே அரவிந்த்சாமி மாறிவிட்டார் என்றே சொல்லலாம். சசிகலா கதாபாத்திரத்திற்கு பூர்ணா, கருணாநிதி கதாபாத்திரத்திற்கு நாசர், எம் ஆர் ராதா கதாபாத்திரத்திற்கு ராதாரவி, ஆர்எம் வீரப்பன் கதாபாத்திரத்திற்கு சமுத்திரகனி என அந்த அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்து உள்ளார் இயக்குனர் விஜய். படத்தில் ஒவ்வொரு காட்சிகளும், வசனங்களும் அருமையாக அமைந்துள்ளது.

ஜெயலலிதா என்னும் மாபெரும் சக்தி தன் வாழ்க்கையில் சந்தித்த அவமானங்கள், துயரங்கள், தோல்விகள், வெற்றிகள் என ஜெயலலிதாவின் முழு வாழ்க்கையுமே படத்தில் காண்பித்துள்ளார். படம் தொடங்கியதிலிருந்து முடியும்வரை காணப்படும் காட்சிகள் ஒவ்வொன்றும் கைத்தட்டும் அளவிற்கு உள்ளது. பாராளுமன்றத்தில் கம்பீரமாக தன்னுடைய ஆங்கிலம் பேசும் திறமையை தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்த தியாகங்கள் என ஜெயலலிதாவின் ஒவ்வொரு வாழ்க்கையின் அங்கங்களையும் மிக சரியாக பதிவு செய்துள்ளார் இயக்குனர். அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி வேற லெவல் என்று சொல்லலாம்

பிளஸ்:

திரைக்கதை, கதைக்கு ஏற்ற நடிகர்கள், வசனங்கள், பாடல்கள் என அனைத்தும் பாராட்டுக்குரிய வகையில் அமைந்துள்ளது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் அப்படியே ஜெயலலிதாவை தத்ரூபமாக காண்பித்துள்ளது.

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பலத்தை கொடுத்து உள்ளது.

மைனஸ்:

சிவாஜி கணேசனின் கதாபாத்திரத்திற்கு மட்டும் கொஞ்சம் வேறு ஒரு நபரை தேர்வு செய்திருக்கலாம். ஆனால்,பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு மைனஸ் அமையவில்லை.

தலைவி மீண்டும் மக்கள் மனதை ஜெயித்து விட்டாள்.

Advertisement