இணையத்தில் வெளியான தளபதி 63 யின் பர்ஸ்ட் லுக்.! ரசிகர்கள் ஷாக்.!

0
2348
Vijay-Bday
- Advertisement -

இளைய தளபதி விஜய் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அட்லீ இயக்கி வரும் இந்தப் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திஎடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த படத்தில் இளைய தளபதி விஜய் அப்பா மற்றும் மகன் என்று இரு வேடங்களில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘

-விளம்பரம்-

தளபதி 63’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இன்று(ஜூன் 21) மாலை 6 மணிக்கு ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இரவு இரவு 12 மணிக்கு செகண்ட் லுக்கும் வெளியாவதாக படக்குழுவினர் கடந்த புதன் கிழமை அறிவித்திருந்தனர்.

இதையும் பாருங்க : யோகி பாபுவுடன் காதல்.! ‘புஷ்பா புருஷன்’ புகழ் ரேஷ்மா அளித்த ஷாக்கிங் பேட்டி.

- Advertisement -

இந்த படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும், விஜய்யின் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என்றும், என்ன தலைப்பு இருக்கும் என்றும் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆவலுடன் பார்த்துக் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த போஸ்டரில் ‘அசால்ட்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையான பர்ஸ்ட் லுக் போஸ்டரா இல்லை ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டரா என்று தெரியவில்லை. இருப்பினும் இந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பகிர்ந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதே போல இந்த படத்திற்கு வெறித்தனம், மைக்கல், கேப்டன் மைக்கல், Cm , அடாவடி, அதிரடி, ஆளப்போறான் தமிழன் , அசால்ட் என்று தலைப்பு இருக்கும் என்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. எனவே, இதில் எதாவது ஒன்று தான் படத்தின் தலைப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement