தமிழ் சினிமாவில் தற்போது காமெடியனாகவும், ஹீரோவாகவும் அசத்தி வருகிறார் பாபு. தற்போது இவரது கைவசம் மட்டும் 17 படங்களுக்கு மேல் இருக்கிறது. விரைவில் இவர் ஹீரோவாக நடித்துள்ள ஜாம்பி, கூர்கா போன்ற படங்களும் திரைக்கு வர இருக்கிறது.
யோகி பாபு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார் என்ற செய்தி சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது தன்னுடன் நடித்த நடிகையுடன் யோகி பாபு காதலில் இருப்பதாக கிசுகிசுக்கபட்டு வருகிறது. அது வேறு யாரும் இல்லை புஷ்பா அக்கா தான்.
இதையும் பாருங்க : பிரபல சீரியல் நடிகை சந்தோஷியா இது.! இப்போ எப்படி இருகாங்க பாருங்க.!
விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘வேலைனு வந்துட்டா வேலைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரைத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் ரேஷ்மா பசுபதி.
திரைப்படத்திற்கு நடிக்க வருவதற்கு முன்பாக பல்வேறு சீரியலில் நடித்துள்ளார் ரேஷ்மா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வாணி ராணி ‘ சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவர் யோகி பாபுவுடன் காதலில் இருப்பதாக ஒரு செய்தி வலம் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நடிகை ரேஷ்மா விளக்கமளித்துள்ளார்.
அதில், நிறைய பேர் எனக்கும் யோகி பாபுற்கும் காதல் என்று கிசு கிசுக்கப்பட்ட செய்திகளை அனுப்பி வைத்தனர். இது சோஷியல் மீடியாவில் வைரலானதால் அதற்கு மறுப்பு அப்போதே தெரிவித்த்ருந்தேன். இதனால் யோகிபாபுவுடன் அடுத்து நடிக்கலாம் என தோன்றியது, அதற்குரிய சான்ஸும் ஒன்று வந்துள்ளது. கூடிய விரைவில் இணைந்து நடிக்கலாம் என்று கூறியுள்ளார்.