திருமணம், 5 வயதில் மகன் – தற்போதும் அதே அழகோடு இருக்கும் ஷாஜஹான் பட நடிகை.

0
2566
richa
- Advertisement -

சினிமா உலகில் ஒரு சில படத்தில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரிச்சா பலோட். இவர் தனது 16 வயதிலேயே மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். மாடலிங் துறையில் இருந்த போதே பல்வேறு விளம்பர படங்களில் நடித்தும் வந்தார். ரிச்சா மாடலிங் துறையில் இருந்த போது 100க்கும் மேற்ப்பட்ட விளம்பரங்களில் நடித்தார். பின் இவர் இந்தியில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘லாமே’ என்ற படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆனார். தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்து மெகா ஹிட் ஆன ஷாஜகான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் ரிச்சா பலோட்.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் காதல் கிறுக்கன் மற்றும் சம்திங் சம்திங் என சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தார். இவர் கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான யாகவாரயினும் நாகாக்க என்ற படத்தில் நடித்தார். அதன் பின்னர் இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. பட வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் சென்று விட்டார். இவர் ஹிந்தியில் இரண்டு தொடரில் நடித்துள்ளார். அதற்கு பின் இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விட்டார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ரிச்சா பல்லோட் அவர்கள் ஷாஜகான் படத்தில் நடித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். சமீபத்தில் நடிகை ரிச்சா பல்லோட் அவர்கள் வீடியோ கால் மூலம் பேட்டி அளித்து இருந்தார். அதில் அவர் ஷாஜகான் பட நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியது, விஜய்யுடன் பாடல் காட்சிகளில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். அவர் ரொம்ப ஈசியாக டைமிங்கை பிக்கப் செய்து விடுவார். அவருடன் டான்ஸ் ஆடுவது செம ஜாலியாக இருந்தது.

ஷாஜகான் படத்தின் ஒவ்வொரு பாடல்களும் சூப்பர். இப்போதும் ஷாஜகான் படத்திற்காக எனக்கு நிறைய அன்பு கிடைக்கிறது.ஷாஜகான் படத்திற்கு ரசிகர்கள் எல்லோரும் நின்று கை தட்டும்போது நான் அழ ஆரம்பித்தேன். நான் ஒரு படத்தில் நடிப்பேன் என்று நான் நினைத்தது கூட இல்லை. ஷாஜகான் படத்தின் மூலம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்று கூறினார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement