விஜய் 65 படத்தின் ஹீரோயின் இவரா ? ஏற்கனவே, மாஸ்டர் படத்துக்கும் இவர தான் சொன்னாங்க.

0
1250
vijay65
- Advertisement -

இளைய தளபதி விஜய் நடிக்கும் தனது 65வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருந்ததுதமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் உள்ளது இந்த திரைப்படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் இவர்களுடன் மாளவிகா மோகனன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ ப்ரேம், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யின் 65ஆவது படத்தை இயக்கப் போவது யார்? என்று சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் அண்மைக் காலமாக எழுந்து வந்தது. இந்த படத்தை இயக்க சிவா, அருண் ராஜா, பாண்டிராஜ், அட்லி, வெற்றிமாறன் என்று பல இயக்குனர்கள் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வந்துகொண்டு இருந்தது.

- Advertisement -

ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை ஒரு வீடியோ மூலமாக வெளியிட்டு இருந்தனர். இந்த படத்தை இயக்க இருக்கும் நெல்சன் ஏற்கனவே கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். அதுபோக தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ படத்தையும் இயக்கி வருகிறார்.

தளபதி 65 படத்தை நெல்சன் இயக்குனராகவும் மற்றும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த தகவலைத் தவிர வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக சமூக வளைதளத்தில் ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது.கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமடைந்த ராஷ்மிகா, தற்போது கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். அதுபோக நடிகை ராஷ்மிகா ஏற்கனவே விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், அந்த படத்தில் மலவிக மோகணன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement