25 வருட சினிமா பயணம்! விஜய்க்கு “தளபதி யுகம்” என்ற பாடல் வெளியீடு? பாடல் வரிகள் உள்ளே

0
1728
vijay

1992ல் நாளையை தீர்ப்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் தளபதி விஜய். அன்றிலிருந்து இன்று வரை பல தடைகளைத் தாண்டி போராடி தற்போது அவர் இருக்கும் இடத்தை அடைந்திருக்கிறார் விஜய். அதற்க்காக அவர் பட்ட அவமானங்கள் மற்றும் இன்னல்கள் பல.
vijay நடிகராக, பாடகராக, டான்சராக பல படங்களில் அடுத்தடுத்து அசத்தி வருகிறார் தளபதி. அதிலும் கடந்த சில வருடங்களில் அவரது வளர்ச்சி மிக அதிகம். தற்போது வெளியாகியுள்ள மெர்சல் அவரது சினிமா வாழ்கையில் தந்திராத வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: விஜய்யின் மெர்சல் படத்தை நேரடியாக பொதுமேடையில் தாக்கி பேசினார் நடிகை தன்ஷிகா

இப்படியாக அவரது சினிமா வாழ்க்கை துவங்கி 25 வருடங்கள் நிறைவுபெற்றுள்ளது. இந்த 25 வருட சினிமா வாழ்க்கையை சிறப்பிக்கும் வகையில் ‘தளபதி யுகம்’ என்ற ஒரு பாடல் வெளியாகியுள்ளது. கணேஷ் மற்றும் விவேக் ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த பாடலை எழுத சூப்பர் சிங்கர் திவாகர் பாடியுள்ளார்.
Actor Vijayகுணசேகரன் பாலசுப்பிரமணியம் இயக்கியுள்ள இந்த பாடலை விஜய் விக்னேஷ் இயக்கியுள்ளார். பாடலில் வரும் வரிகள் தமிழர்களின் புகழை பறைசாற்றுவதாகவும், தளபதியின் புகழை எடுத்துக் கூறுவதாகவும் உள்ளது.

தளபதிக்கு தலை வணங்கும் தென்பொதிகை வணக்கம்
தளபதியின் பேரை சொல்லி பாட ஆசை இருக்கும்

என்று தொடங்கும் இந்த பாடல் முழுவதும் விஜய்யின் போற்றும் வகையில் உள்ளதால் விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.vijay

‘தளபதி யுகம்’ ,பாடலின் பாடல் வரிகள் சில,

‘திமில் பிடித்த தமிழர்கள் நாங்கள்,
அடக்க நினைத்தால் துள்ளி வருவது காளைகள் மட்டும் அல்ல
என் தமிழ் இனமும் கூட
நேற்று நாம் சத்தம் தட்டி வாடிவாசல் திறந்தோம்
இன்று ரத்தம் சிந்தியும் நம் மக்களை மீட்டெடுப்போம்
ஆளப்போறான் தமிழன்.