கவர்ச்சியில் அசத்தும் தமன்னா, வெளியான ஜெயிலர் பட போஸ்டர்- உற்சாகத்தில் ரசிகர்கள்

0
1529
- Advertisement -

கவர்ச்சி உடையில் தமன்னா அசத்தும் ஜெயிலர் பட போஸ்டர் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா நடித்த ‘கேடி’ படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது. அதோடு சமீப காலமாகவே இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார்.

- Advertisement -

தமன்னா திரைப்பயணம்:

கடந்த ஆண்டு ஹிந்தியில் தமன்னா நடித்திருந்த படம் பப்ளி பவுன்சர். இந்த படத்தில் இவர் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இதனை அடுத்து தமன்னா அவர்கள் ஹிந்தியில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஜீ கர்தா என்ற தொடரிலும் தமன்னா நடித்திருக்கிறார். மேலும், சமீபத்தில் தமன்னா நடித்த லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்ற வெப் தொடர் வெளியாகி இருக்கிறது.

தமன்னா நடிக்கும் படங்கள்:

இதில் விஜய் வர்மா, கஜோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த வெப் தொடரில் தமன்னா ரொம்ப கவர்ச்சியாகவும், படுகை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்திருக்கிறார். சொல்லப்போனால், இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தில் ஓவர் கிளாமராக தமன்னா நடித்திருக்கிறார். இது குறித்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை எழுந்திருக்கிறது. இதனை அடுத்து தற்போது தமன்னா அவர்கள் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் என்ற பட்டத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஜெயிலர் படம்:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மோகன்லால், பிரியங்கா மோகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி என பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். மேலும், இப்படத்தில் ரஜினி அவர்கள் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக இந்த படம் தயாராகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கவர்ச்சியில் தமன்னா:

அதோடு இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு புரோமோ வெளியிட்டிருந்தது. அதற்கு முன்பே ‘ஜெயிலர்’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கவர்ச்சியான உடையில் தமன்னா இருக்கிறார். தற்போது இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement