தன் மகனுக்காக தமன்னாவுக்கு 2 கோடி சம்பளம் கொடுத்த பிரபலம்..! அதிர்ச்சியில் நடிகைகள்

0
1961
thamanna

நடிகை தம்மனா, தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். மேலும் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தில் நடித்ததற்கு பின்னர் இவரது மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது. இந்நிலையில் நடிகை தமன்னாவிற்கு கன்னடத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட கோடி கணக்கில் சம்பளம் கொடுத்துள்ளனர்.

nikhil Goud

கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சராக இருந்து வந்தவர் குமாரசாமி. இவர் கர்நாடக மாநிலத்தில் ஜனதா தளம் என்ற கட்சியை நிறுவு வருகிறார். தற்போது அங்கு நடந்து முடிந்த தேர்தலில் கூட இவரது கூட்டணியில் சேர பல கட்சிகளும் இவருக்கு வலை வீசி வருகின்றது.

இவருக்கு நிகில் கௌடா என்ற மகனும் இருக்கிறார். கன்னட மொழியில் இவர் 2016 ஆம் ஆண்டு “ஜாகுவார்” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை இவரது அப்பாவான குமாரசாமி அந்த படத்தை பல கோடிகள் செலவழித்து படத்தை தயாரித்தார்.

nikil

அந்த படம் வெளியாகி கர்நாடகாவில் மாபெரும் ஹிட்டானது. இந்த படத்தில் நடிகை தமன்னா ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அந்த பாடலுக்காக மட்டும் 2 கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக வாரி வழங்கியுள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளரான குமாராசாமி.