ஜேம்ஸ் வசந்தால் தாமரைக்கு கிடைத்த வீடு – கிரகபிரவேச பத்திரிக்கையில் அந்த ஒரே ஒரு பிக் பாஸ் போட்டியாளரின் பெயரை போட்ட தாமரை

0
2547
- Advertisement -

பிக் பாஸ் தாமரைச்செல்வி அம்மாவின் புது வீட்டு கிரகப்பிரவேசம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத பல புது முக போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அதில் ஒருவர் தான் தாமரைசெல்வி. இவர் தன்னுடைய சிறு வயதிலேயே மேடை நாடக கலைஞராக மாறி குடும்ப கஷ்டத்தை போக்க வேலை செய்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். அதோடு இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை தாமரை சென்று இருந்தார். சொல்லப்போனால், இவர் டைட்டில் பட்டத்தை தட்டி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவர் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரை செல்வி தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட், பிக் பாஸ் ஜோடிகள் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்தார். ஆனால், தாமரை எந்த நிகழ்ச்சியிலும் வெற்றி பெறவில்லை

- Advertisement -

தாமரை செல்வி குறித்த தகவல்:

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரை செல்வி சீரியல்களிலும், படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் முடிவடைந்த பாரதி கண்ணம்மா 2 சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தாமரைச்செல்வி நடித்திருந்தார். தற்போது இவர் சரத்குமார் நடிப்பில் உருவாகி வரும் ஆழி என்ற படத்தில் முக்கிய கதாபாத்தில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தாமரை செல்வி அம்மா வீட்டின் புதுமனை புகுவிழா குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

தாமரை செல்வி தாய் வீடு:

அதாவது, ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தகப்பனான ஒருவரை திருமணம் செய்துள்ளார் தாமரை. அவருடன் ஒரு மகனையும் பெற்றுள்ளார். பின் அந்த வாழ்க்கை பிரச்னையில் முடியவே அவரை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டார். இருந்தாலும், தன்னுடைய இரண்டு பிள்ளைகளுக்காக தான் தாமரை நாடகத்தில் நடித்து வருகிறார் என்று கூறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியினால் தாமரை செல்வி வாழ்க்கையே மாறிவிட்டது.

-விளம்பரம்-

தாமரை செல்வி தந்தை மரணம்:

ஆனால், தாமரை செல்வியின் அம்மா குடும்பம் மட்டும் இன்னும் ஒரு ஓலை குடிசையில் தான் தங்கி வருகின்றனர். இதை அறிந்த தொகுப்பாளரும் இசையமைப்பாராளருமான ஜேம்ஸ் வசந்தன் தாமரை செல்வியின் அம்மா குடும்பத்திற்கு வீடு ஒன்று கட்டி தருவதாக கூறி இருந்தார். பின் கடந்த ஆண்டு மே மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.. அந்த வீட்டின் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. மேலும், இந்த வீட்டின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தான் தாமரை செல்வியின் தந்தை காலமாகி இருந்தார்.

புதுமனை புகுவிழா பத்திரிக்கை:

இதனால் இந்த வீட்டினுடைய கிரகப்பிரவேசம் தள்ளிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் வருகிற 14-ம் தேதி இந்த வீட்டினுடைய புதுமனை புகுவிழா நடக்க இருக்கிறது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், பிக் பாஸ் ஐக்கி பெர்ரி, தேவ் மேஜர் உட்பட பலர் வர இருக்கின்றார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த விழாவின் பத்திரிகையை தாமரைச்செல்வி தன்னுடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து பலருமே தாமரைச்செல்விக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement