விளக்கு புடிச்சி பாக்க போறியானு கேட்பது என்ன நியாயம் – சீமான் விஜயலக்ஷ்மி விவகாரம் குறித்து வீரலட்சுமி

0
1340
- Advertisement -

விஜயலட்சுமி நடவடிக்கை குறித்து தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. தற்போது பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் தமிழ்நாட்டுக்கும்-பெங்களூருக்கும் விஜயலட்சுமி அலைந்து கொண்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை விஜயலட்சுமி குறித்து சில ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் தான் உள்ளன.

-விளம்பரம்-

பின் தனக்கு பிரச்சனை இருப்பதால் இணையத்தில் தனக்கு உதவி செய்யுங்கள் என்றும் இவர் வீடியோ போட்டிருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனிடையே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தன்னை மூன்று வருடமாக காதலித்து விட்டு திருமணம் செய்து கொள்ளவதாக சொல்லி தற்போது மறுக்கிறார் என்று போலீசில் விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இது தொடர்பாக விஜயலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

விஜயலட்சுமி அளித்த புகார்:

ஒரு கட்டத்தில் விஜயலக்ஷ்மி தற்கொலைக்கு கூட முயன்று இருந்தார். பின் சமீப காலமாக சீமானை பற்றி எந்த விஷயத்தையும் பேசாமல் இருந்து வந்த விஜயலக்ஷ்மி சமீபத்தில் சீமான் மீது மீண்டும் போலீசில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்து இருக்கிறது. மேலும், இது குறித்து சில நாட்களுக்கு முன்பு ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி இடம் துணை கமிஷனர் உரிமையாளர் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை நடத்தி இருந்தார்.

போலீஸ் விசாரணை:

பின் திருவள்ளூர் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இதை அடுத்து நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்த சம்மன் அனுப்பி இருக்கிறது. ஆனால், சீமான் ஆஜராகவில்லை. இது குறித்து மீண்டும் விஜயலக்ஷ்மி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி துணையாக இருக்கிறார். இவர் விஜயலட்சுமிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோயம்பேடு துணை ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்று அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

வீரலட்சுமி அளித்த பேட்டி:

இந்நிலையில் இதனை அடுத்து இவர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியில், சீமானால் என்னுடைய சகோதரி விஜயலட்சுமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். காரணம், அவர் அங்கிருந்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் பிரச்சனை செய்திருந்தார்கள். இதனால் செங்கல்பட்டில் உள்ள என்னுடைய உறவினர் வீட்டில் அவரை தங்க வைத்தோம். கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் மேடத்தை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும், விஜயலட்சுமி அவர்கள் என்னிடம் உதவி கேட்டு வரும் வரை சரியான நிலையில் தான் இருந்தார்கள். ஆனால், எப்போது வளசரவாக்கம் ஏசி விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு பேசினார்களோ அப்போது முதல் விஜயலட்சுமி உடைய நடவடிக்கை மாறி இருக்கிறது.

விஜயலக்ஷ்மி குறித்து சொன்னது:

நாம் தமிழர் கட்சியில் உள்ள சாட்டை துரைமுருகன் என்பவன் பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் என்பவரை தொடர்பு கொண்டு நள்ளிரவில் பச்சை பச்சையாக பேசி திட்டியுள்ளார். விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் சண்டை என்று என்னுடைய சிறிய தகப்பனாரிடம் தொடர்பு கொண்டு வளசரவாக்கம் உதவி ஆணையர் கௌதமன் பேசியிருக்கிறார். எங்களுக்குள் சண்டை வரவேண்டும் என்று ஏசி கௌதமன் நினைக்கிறார். உங்களுக்கு அக்கறை இருந்தால் விஜயலட்சுமி வீட்டில் கொண்டு போய் வைத்துக் கொள்ளுங்கள். நாம் தமிழர் கட்சியின் தினந்தோறும் வாட்ஸ்அப்களில் அசிங்க அசிங்கமாக பேசி எனக்கு அனுப்புகிறார்கள். நேற்று கூட நாம் தமிழர் கட்சியின் ஒரு பெண், வீரலட்சுமி விளக்கு பிடித்து பார்த்தார்களா? என்று பேசி இருக்கிறார். இதுதான் நாம் தமிழர் கட்சியின் கொள்கையா? இப்படி என்றால் மக்கள் ஓட்டு போட்டு உங்களை தேர்ந்தெடுத்தால் என்ன ஆகும். தமிழ்நாட்டில் மிகப் பெரிய பெண் ஆளுமையாக இருக்கும் ஒருவரை விளக்க பிடித்து பார்க்கப் போகிறாயா என பேசுவது என்ன நியாயம் என்று கடுமையாக கண்டனம் தெரிவித்து பேசி இருக்கிறார்.

Advertisement