‘சாமி சாமி’ பாடலுக்கு செம ஆட்டம் போட்ட சன் டிவி சீரியல் அம்மா நடிகை – வைரலாகும் வீடியோ.

0
1053
meera
- Advertisement -

சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்தின் சாமி சாமி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் சன் டிவி சீரியல் அம்மா. வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை சீரியல் நடிகர்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறார்கள். சின்னத்திரையில் சீரியல்களில் யங்க் அண்ட் பியூட்டி அம்மாவாக பல நடிகைகள் வலம் வருகிறார்கள். அந்த பட்டியலில் நடிகை மீரா கிருஷ்ணனும் ஒருவர் ஆவார். மீரா அவர்கள் மூன்று வயதில் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். இவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர். இவர் முறையாக கிளாசிக்கல் நடனம் கற்றவர்.

-விளம்பரம்-
Rekha Krishnappa all excited about her new project 'Thamizhum Saraswathiyum'  - Times of India

இவர் கிளாசிக்கல் நடனம் ஆடி வெற்றி பெற்றதன் மூலம் தான் பிரபலமானார். அதை தொடர்ந்து இவர் மார்கம் படம் மூலமாக சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வந்தன. ஆனால், மீரா அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தியதால் பல பட வாய்ப்புகளை தவறவிட்டார். பிறகு மீரா படிப்பை முடித்த உடன் தன்னுடைய சினிமா கெரியரை தொடங்கினார்.

- Advertisement -

மீராவின் குடும்பம்:

மேலும், இவர் பல படங்கள், சீரியல்களில் நடித்து வந்தார். பின் தனது திருமணத்திற்கு பிறகு சென்னையில் செட்டில் ஆனார். இவருக்கு அழகான இரண்டு மகன்கள் உள்ளார்கள். இவரின் கணவரும் சினிமா நடன ஆசிரியர் ஆவார். இதனால் மீண்டும் மீராவுக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கலைஞர் டிவியில் ஒளிபரப்பான பொக்கிஷம் சீரியல் மூலம் தான் தமிழ் சினிமா துறைக்குள் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

மீரா நடிக்கும் சீரியல்கள்:

அதற்குப் பிறகு நாயகி, வந்தாள் ஸ்ரீதேவி, சித்தி-2 போன்ற பல சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக்குக்கு அம்மாவாக கோதை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 36 வயது தான் இருக்கிறது. இருந்தாலும் இவர் தனது வயதை விட அதிகமாக உள்ள நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்கிறார்.

-விளம்பரம்-

தமிழும் சரஸ்வதியும் சீரியல்:

அதிலும் அந்த சீரியலில் நடிக்கும் தீபக் இவரை விட பல வயது மூத்தவர். ஆனால், அவருக்கே மீரா அம்மாவாக நடித்து வருகிறார். இவருடைய கதாபாத்திரம் அனைத்தும் அம்மா சென்டிமென்ட் என்பதால் மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி தான் நடத்திய போட்டோ ஷூட் புகைப்படங்கள், வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருவார். இந்த நிலையில் மீரா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மீரா நடனம் ஆடிய வீடியோ:

அதில் அவர் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த புஷ்பா படத்தில் இருந்து சாமே சாமே என்ற பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் அம்மா நடிகையா இப்படி ஆடுவது? என்று வியப்பில் கேட்டு வருகிறார்கள். அதோடு இந்த விடியோவை லைக்ஸ் செய்தும் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Advertisement