தமிழும் சரஸ்வதியும் சீரியல்பிரபலத்திற்கு குழந்தை பிறந்தது அவரே வெளியிட்ட புகைப்படம் இதோ.

0
927
navin
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் இல்லத்தரசிகளின் பேவரைட்டாக விஜய் டிவி சீரியல்கள் இருக்கிறது. அதிலும் கொரோனா தொற்று காலம் தொடங்கியதிலிருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்றதால் ஒவ்வொரு சேனலும் தங்களுடைய சேனலின் டிஆர்பிக்காக வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை களமிறக்கி வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் பல தொடர்கள் புதிதாக ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் ஒன்று தான் தமிழும் சரஸ்வதியும் தொடர்.

-விளம்பரம்-

இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த தொடரை குமரன் இயக்குகிறார். இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் தீபக் தினகரனும், சரஸ்வதி கதாபாத்திரத்தில் நச்சத்திரா நடிக்கிறார்கள். இவர்களுடன் ரேகா கிரிஷ்ணப்பா, தர்ஷனா, மீரா, ரமணிசந்திரன், நவீன் வெற்றி, பிரபாகரன் சந்திரன், அனிதா வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடர் பணக்கார குடும்பத்தை சேர்ந்த தமிழ் என்பவன் தனது குடும்ப சூழ்நிலைக்காக படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு தொழிலை கவனித்து வெற்றி அடைகிறார்.

- Advertisement -

தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதை:

ஆனால், சமூகம் அவனை படிக்காதவன் என்று சொல்லி ஒதுக்கி வைக்கிறது. பின் அவருக்கு பெண் பார்க்கும் இடத்திலும் படிக்காதவன் என்பதால் பெண்ணை யாரும் கொடுப்பதில்லை. அந்த சமயத்தில் தான் அழகான வெகுளித்தனமான சரஸ்வதி வருகிறார். ஆனால், அவள் பன்னிரெண்டாம் வகுப்பு கூட தேர்ச்சி அடையாமல் இருக்கிறார். பின் தமிழின் குடும்பத்திற்கு சரஸ்வதி பிடித்து போகி சரஸ்வதி எம்பிஏ படித்தவர் என்று பொய் சொல்லி திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. மேலும், திருமணம் நடந்து முடிந்த அடுத்த நிமிடமே தமிழின் அம்மா கோதைக்கு சரஸ்வதி படிக்கவில்லை என்பது தெரிகிறது. இதனால் மனமுடைந்த கோதைக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தற்போது நடப்பது:

பின் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதான் சாக்கு என்று சந்திரலேகா, கோதையின் மொத்த குடும்பத்தையும் ஆட்டிவைக்கிறார். தமிழ்- சரஸ்வதி மீது கோதையின் மொத்த குடும்பமே கோபத்தில் இருக்கிறது. கார்த்திக்கும், சரஸ்வதி- தமிழையும் பயங்கரமாக திட்டி பேசி வெளியே துரத்துகிறார். மருத்துவ மனையிலிருந்து வீட்டுக்கு வந்த கோதை தமிழ்- சரஸ்வதியும் வீட்டிற்கு வரவைத்து, இது உங்கள் வீடு ஆனால் உங்களிடம் யாரும் பேசமாட்டார்கள். உங்களுடைய வேலையை நீங்கள் பாருங்கள் என்று சொல்கிறார். பிறகு சரஸ்வதி நாம் படிக்காததால் தான் இவ்வளவு பிரச்சனை. படித்து எப்படியாவது எம்பிஏ பட்டம் ஆகும் என்று முழு முயற்சியுடன் சரஸ்வதி படிக்கிறார்.

-விளம்பரம்-

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடிக்கும் நவீன்:

இதைக் கிண்டல் செய்த உடன் கார்த்திக்கிடம் சரஸ்வதி சபதம் போடுகிறார். அதோடு தன் மாப்பிளை கார்த்திகை கைக்குள் போட்டு கொண்டு கோதையை பழி வாங்குகிறார் சந்திரலேகா. இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் சென்றுகொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், இந்த சீரியலில் நடிக்கும் கார்த்திக் பற்றி தான் ஒரு ஸ்பெஷலான தகவல் வெளியாகியுள்ளது. சந்திரலேகாவின் மாப்பிள்ளையாக, தமிழின் தம்பியாக கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நவீன். இவர் இதற்கு முன்பு பல தொடர்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் முடிவடைந்த தேன்மொழி பிஏ என்ற தொடரிலும் இவர் தாசில்தாராக நடித்திருந்தார்.

நவீன் இன்ஸ்டாவில் பதிவிட்ட பதிவு:

அதற்கு பிறகு இவர் பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். இதனிடையே நவீன், சௌமியா என்பவரை திருமணம் செய்திருந்தார். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் தன் மனைவி சௌமியா உடன் நவீன் பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பதை குறித்து கூறி இருந்தார். சமீபத்தில் நவீன் தன் மனைவி சௌமியாவிற்கு நடந்த சீமந்த நிகழ்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது நவீனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.தன் குழந்தையின் கையை பிடித்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நவீன் சோசியல் மீடியாவில் பதிவிட்டு ஏஞ்சல் வந்துவிட்டாள் என்று கூறியிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் நவீனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement