‘திரௌபதி பிடிக்கல, ருத்ர தாண்டவம் படத்த பாக்கணுமானு’ – தங்கர் பச்சான் பரபரப்பு கடிதம்

0
2184
thangar
- Advertisement -

திரௌபதி படத்தைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கௌதம் வாசுதேவ் தர்ஷா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் தான் ருத்ரதாண்டவம். இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

-விளம்பரம்-

மேலும், சினிமா பிரபலங்களும் ருத்ர தாண்டவம் படம் குறித்து தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் ருத்ர தாண்டவம் படத்தை பார்த்துவிட்டு தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனரும் நடிகருமான தங்கர்பச்சன் அவர்கள் மோகனுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இந்த படத்தை ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டியது கடமை என உணர்கிறேன்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் என்ட்ரி கொடுத்துள்ள ஜெமினி கணேசனின் பேரன் – கமல் சிபாரிசா இருக்குமோ.

- Advertisement -

மக்கள் தங்கள் வாழ்க்கையில் நாள்தோறும் சந்திக்கின்ற சிக்கல்களையும், பிரச்சனைகளையும் தான் காட்சிகளாக நம் முன் வைத்திருக்கிறார் மோகன். மக்களின் பலவீனத்தை பணம் ஆக்குவதற்காக பொழுதுபோக்கு எனும் போதை மருந்து பொருளை உருவாக்கி சமூகத்தைப் பின்னோக்கி சீரழிவுக்கு கொண்டு சொல்லும் இடையில் விழிப்புணர்வை தூண்டும் வகையில் ருத்ர தாண்டவம் படம் உள்ளது.

இந்த காலகட்டத்தில் கிடைத்த வசதி வாய்ப்புகளைக் கொண்ட எவரும் பேசத் துணியாத கருத்துக்களை சினிமா துறையின் மூலமாக பல கோடி மக்களின் இதயத்திற்கு கொண்டு சென்றிருக்கும் உங்களுக்கும் உங்களுடைய திரைப் படக் குழுவினருக்கும் மக்களின் ஒருவனாக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தங்கர்பச்சன் பாராட்டி இருக்கிறார். இவர் பாராட்டிய கடிதம் குறித்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், அஜித்தின் மனைவி ஷாலினியும் ருத்ரதாண்டவம் குறித்து பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement