பிக் பாஸில் என்ட்ரி கொடுத்துள்ள ஜெமினி கணேசனின் பேரன் – கமல் சிபாரிசா இருக்குமோ.

0
2102
bb
- Advertisement -

இந்தியா முழுவதும் ஒளிபரப்பாகும் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகின்றது. அந்தவகையில் தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

தமிழில் இந்த நிகழ்ச்சி நான்கு சீசன்களை கடந்து தற்போது 5வது சீசன் தொடங்க உள்ளது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று மாலை பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த பிக் பாஸ் சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் வெளிவந்துள்ளது.

- Advertisement -

இந்த சீசனில் கானா இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, அப்சாரா ரெட்டி, நமிதா மாரிமுத்து, நதியா சங், அபிநய் வட்டி, நடிகர் வருண், பாடகி சின்ன பொண்ணு, ப்ரித்தி சஞ்சீவ், ப்ரியங்கா, நிழல்கள் ரவி, பவானி ரெட்டி, கோபிநாத் ரவி மற்றும் நிரூப் நந்தகுமார் போன்ற பலர் கலந்துகொண்டு இருப்பதாக தகவல் வெளியானது.

இதில் பிரபல தமிழ் சினிமா நடிகரான ஜெமினி கனேசனின் பேரன் கலந்துகொண்டு இருக்கிறார். அது வேறு யாரும் இல்லை அபினவ் ரெட்டி தான். இவர் தெலுங்கில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான யங் இந்தியா என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் கணித மேதை ராமானுஜமின் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், உலக நாயகன் கமல் திரையுலகில் அறிமுகமானது ஜெமினி கணேசன் நடித்த களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் ஜெமினி கனேசனுடன் பல படங்களில் நடித்த கமல் இறுதியாக அவருடன் ‘அவ்வை ஷண்முகி’ படத்திலும் நடித்தார். எனவே, தான் அறிமுகமான நாயகனின் பேரனுக்காக கமல்தான் அபினய்க்கு சிபாரிசு செய்தாரா என்பது தெரியவில்லை

Advertisement