ஹீரோவாக அறிமுகமான தங்கர் பச்சானின் மகன் – வெளியான போஸ்டர். இவருக்கு இவ்ளோ பெரிய மகனா?

0
254
- Advertisement -

தங்கர் பச்சானின் மகன் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக இருப்பவர் தங்கர் பச்சான். இவர் 40க்கும் மேற்பட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். மேலும், இவர் திரைப்பட இயக்குனர், நடிகர், ஒளிப்பதிவாளர், எழுத்தாளர், ஒளி ஓவியர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் அழகி, சொல்ல மறந்தகதை, பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு, களவாடிய பொழுதுகள் என பல திரைப்படங்களை இயக்கியும் நடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பார்த்திபன், சேரன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இவருடைய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர் எப்பவுமே எதார்த்தமான கிராமப்புற கதைகளை மையமாக கொண்டு தான் படம் இயக்குவார். அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் கருமேகங்கள் கலைகின்றன.

- Advertisement -

தங்கர் பச்சான் திரைப்பயணம்:

நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தை இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன், யோகி பாபு, எஸ் ஏ சந்திரசேகர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். தந்தை-மகனுக்கு இடையேயான பாச போராட்டத்தை மையமாகக் கொண்ட படம். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

தங்கர் பச்சானின் மகன் நடிக்கும் படம்:

இந்த நிலையில் தங்கர் பச்சானின் மகன் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்க இருக்கும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. தங்கர் பச்சான் மகன் விஜித் கதாநாயகனாக நடிக்கும் படம் பேரன்பும் பெருங்கோபமும். இவர் ஏற்கனவே ஒளிப்பதிவாளராகவும், இயக்குனராகவும் சினிமாவில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார். பாலு மகேந்திரனின் சினிமா பட்டறையில் மாணவராக இருந்த சிவபிரகாஷ் தான் இந்த படத்தை இயக்குகிறார். இதுதான் இவருடைய முதல் படம்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

மேலும், இந்த படத்தில் விஜத்க்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜே பி தினேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தை ரியோட்டா மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை பற்றி இயக்குனர் கூறியிருப்பது, இந்த படம் கதாநாயகனின் வாழ்க்கையில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு.

இயக்குனர் பேட்டி:

சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை கதாநாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை தான் விறுவிறுப்பான காட்சிகளுடனும் சுவாரசியம், திருப்பங்களுடனும் உருவாக்கப்பட்டு இருக்கிறோம். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கண்டிப்பாக இந்த படம் மக்களுக்கு பிடிக்கும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement