தனி ஒருவன் 2 பற்றிய சூப்பர் தகவலை சொன்ன இயக்குனர் ராஜா.! செம சர்ப்ரைஸ் வைட்டிங்.!

0
551
Thanioruvan-2

தமிழ் சினிமாவில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மோகன் ராஜா. ஜெயம் படத்திற்கு பின்னர் இவர் எடுத்த படங்களும் வேற்று மொழி படத்தின் ரீ-மேக்காக தான் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “தனி ஒருவன் ” படம் இவரது சொந்த கதையாக இருந்தது.

thani-oruvan-2

ஜெயம் ரவி , நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மாபெரும் ஹிட் அடைந்தது. இயக்குனர் மோகன் ராஜா, ஜெயம் ரவி, அரவிந்த் சாமி உள்ளிட்டோருக்கு இந்த படம் ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமைந்தது என்றே கூறலாம். இந்நிலையில் “தனி ஒருவன்” படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் மோகன் ராஜா மீண்டும் திட்டமிட்டுள்ளார்.

இதையும் படியுங்க : காதலருடன் பிக் பாஸ் வருகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சர்ச்சை நடிகை.! 

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராஜா, முதல் பாகத்தை விட பல மடங்கு திரில்லராக இந்த திரைப்படம் உருவாகும், நீங்கள் எதிர்பார்க்காத பல விஷயங்கள் இந்த திரைப்படத்தில் இருக்கும், அது மட்டுமில்லாமல் பல சர்ப்ரைஸ்களும் இருக்கும் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்

thani-oruvan

அதே போல முதல் பாதியில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அசத்திய அரவிந்சாமி கதாபாத்திரம் இருந்து விடுவது போல காட்சி அமைக்கபட்டிருந்தது. எனவே, அவருக்கு நிகராக இரண்டாம் பாகத்தில் யார் நடிப்பார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement