சினிமாவில் இந்த நடிகை மாதிரி ஆகணும்..? யார் தெரியுமா..? பாத்தா கோபப்படுவீங்க ! ஜூலி காமெடி

0
1585
julie
- Advertisement -

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் தங்களது நல்ல குணத்தால் மக்கள் மனதை வென்று தனக்கான பிரபலத்தை தேடிக்கொண்டனர் . ஆனால் ஒரே ஒரு நபர் மட்டும் தன்னிடம் உள்ள எதிர்மறையான விஷயங்களின் மூலம் மக்கள் மனதில் வெறுப்பை சம்பாதித்து ,அதன் மூலம் பிரபலத்தை ஏற்படத்திக் கொண்டு இப்படியும் பிரபலமாகலாம் என்று மக்களுக்கு கற்றுக்கொடுத்தார். அது வேறு யாரும் இல்லை நம்ம ஜூலி தான்.

-விளம்பரம்-

Julie bigg boss

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் ஏற்பட்டு பின்னர் தொலைக்காட்சி விளம்பரங்கள்,டிவி ஷோக்கள் என்று பல வைப்புகள் வந்துகொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “ஓடி விளையாடு பாப்பா” என்ற குழந்தைகள் நடன நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார்.

இவர் ஏற்கனவே சமீபத்தில் விமல் நடிப்பில் வெளியான “மன்னர் வகைரா” என்ற படத்தின் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது “உத்தமி” என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இதை விட கொடுமையான விஷயமாக சமீபத்தில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் கதாபாத்திரத்தில் “அனிதா எம் பி பி எஸ் “ஜூலி நடிக்க போகிறார் என்று ஒரு சில போஸ்டர்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களை வெறுப்பேற்றியது.

-விளம்பரம்-

simran

தற்போது சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜிலியிடன் உங்களுக்கு எந்த நடிகை போல வர வேண்டுமென்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜூலி கொஞ்சம் கூட தயங்காமல்”எனக்கு சினிமாவில் சிம்ரன் மாதிரி ஆகா வேண்டும் என்பது தான் ஆசை, ஆனால் நடிப்பில் ஆச்சி மனோரமா போல் வர வேண்டும். மேலும் தனக்கு கதாநாயகியாக வர வேண்டும் என்பதெல்லாம் ஆசை இல்லை. ஒரு நல்ல நடிகையாக இருந்தாள் போதும் ” என்று கூறியுள்ளார் உத்தமி ஜூலி.

Advertisement