சர்ச்சையை ஏற்படுத்திய பேமிலி மேன் 2. சீமான் எச்சரிக்கைக்கு பின் சமந்தா போட்ட பதிவு.

0
24258
samantha
- Advertisement -

சமீபத்தில் வெளியாகி இருந்த தி பேமிலி மேன் 2 ட்ரைலர் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தி பேமிலி மேன் வெப் தொடரின் முதல் சீசன் கடந்த 2019 ஆம் ஆண்டு அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. ராஜ், டிகே ஆகியோர் இயக்கி இருந்த இந்த வெப் தொடரில் இதில் மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, நீரஜ் மாதவ், சந்தீப் கிஷன் போன்ற ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர்கள் நடித்து இருந்தனர். இன்வெஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லராக இந்த தொடர் உருவாகி இருந்தது. மேலும், ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது.

-விளம்பரம்-

முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த தொடரின் இரண்டாம் சீசன் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே முதல் சீசனில் நடித்த நடிகர்களுடன் இந்த இரண்டாம் தொடரில் சமந்தாவும் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் இந்த தொடரின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. இதில் சமந்தா இலங்கையில் இருந்து வந்தவரை போல காட்டப்பட்டுள்ளது.

இதையும் பாருங்க : தலையை திருப்பிக்கொண்டு இருக்கும் தல, ஒரு சீட்டு தள்ளி அமர்ந்திருக்கும் தளபதி – வைரலாகும் Unseen புகைப்படம்.

- Advertisement -

இலங்கையில் இருந்து வந்த தீவிரவாதிதான் சமந்தா என்றும், ,மனோஜ் பாஜ்பாயி அவரை பிடிக்கும் என்ஐஏ அதிகாரியாகவும் கதை அமைக்கப்பட்டுள்ளது.இந்த ட்ரைலரில் நான் எல்லோரையும் கொல்ல வேண்டும் என்று சமந்தா தமிழில் பேசுவதாகவும் காட்டி இருக்கிறார்கள். இந்த ட்ரைலரை பார்த்த பலர் தமிழகர்களை தீவீரவாதிகளாக காட்டும் இந்த தொடரை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்த தொடர் வெளியானால் கடும் விளைவுகளை செந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விட்டுள்ளார் சீமான்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், அழிவின் விளிம்பில் நிற்கிற அன்னைத் தமிழினத்தின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும் இத்தொடரை ஒளிபரப்புவதை முற்றாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஏற்கனவே, மிகத்தவறாக எடுக்கப்பட்ட இனம், மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்களுக்கு எழுந்த எதிர்ப்பினை உணர்ந்து திரையிடப்படாது, அவை ரத்து செய்யப்பட்டது போல, தி பேமிலி மேன் 2 எனும் இணையத்தொடரின் ஒளிபரப்பையும் ரத்து செய்ய வேண்டும்.

-விளம்பரம்-

அதனைச் செய்ய மறுத்து, தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில் சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் ’அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டாலும் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்’ என்பதையும் பதிவு செய்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவை பார்த்த பலர் மீண்டும் சமந்தாவை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement