தவறான மருத்துவ முறையை விளம்பரம் படுத்தியதற்கு சமந்தாவை கண்டித்ததற்கு மருத்துவர் தற்போது மீண்டும் கொடுத்து இருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் 12 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் சமந்தா அவர்கள் மூக்கில் நெபுலைசர் கருவியை வைத்தவாறு புகைப்படத்தை பதிவிட்டு பொதுவாக வைரல் தொற்றுக்கு மருந்து கொள்ளும் முன் ஒரு மாற்று வழியை முயற்சித்து பாருங்கள். அதில் ஒரு வழி தான் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவை மூலம் நெபுலைஸ் செய்வது என்று கூறியிருக்கிறார்.

இப்படி இவர் போட்டிருக்கும் பதிவு தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி பலருமே கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் மருத்துவர் லிவர் டாக், சுவாச வைரஸ் தொற்றுகளை தடுக்கவும், சிகிச்சை அளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு சுவாசிக்க வேண்டும் என்று சமந்தா கூறி இருக்கிறார். ஆனால், அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடு எடுக்க வேண்டாம் என்று எச்சரித்து இருக்கிறது. காரணம், அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான ஒன்று. பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியாக இருக்கும் ஒரு முற்போக்கான காலத்தில் சுகாதாரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் சமந்தா கூறியிருக்கிறார். அதனால், சமந்தாவிற்கு அபதாரம் அல்லது சிறை தண்டனை கொடுக்க வேண்டும்.
சமந்தா குறித்த சர்ச்சை:
மருத்துவம் தொடர்பாக அவருக்கு சிறந்த ஆலோசகர் தேவை என்று கூறி இருந்தார். அதை அடுத்து இது தொடர்பாக சமந்தா விளக்கம் கொடுத்திருந்தார். அதில் அவர், எனக்கு இந்த சிகிச்சை பலன் அளித்தது. இதனால் நான் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் தான் பரிந்துரைத்தேன். இதில் பணம் சம்பாதிப்பது போன்ற எந்த ஒரு தவறான நோக்கத்திலும் சொல்லவில்லை. நான் முயற்சித்து பார்க்காமல் அந்த சிகிச்சையை யாருக்கும் சொல்லவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நான் பலவகையான மருந்துகளை எடுத்திருந்தேன். எனக்கு பரிந்துரைக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் நிபுணர்களின் அறிவுறுத்தல் படி எடுத்துக் கொண்டேன்.
View this post on Instagram
சமந்தா விளக்கம்:
அனுபவம் இல்லாமல் போற போக்கில் நான் எந்த சிகிச்சையும் சொல்லவில்லை. என்னுடைய பதிவை தாக்கியும், என்னுடைய நோக்கத்தை தவறாக புரிந்து கொண்டும் சில கருத்துக்கள் வருவதை அறிந்தேன். மருத்துவர்கள் என்னை விட அதிகமாக அனுபவம் உள்ளவர்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. அவருடைய கருத்து நல்ல நோக்கத்திற்கான என்பதையும் அறிவேன். ஆனால், அவர் அதை சொல்லும் விதம் தான் தவறு. நான் சிறையில் தள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஒருவேளை நான் பிரபலமாக இருப்பதால் இப்படியான கருத்துக்கள் வருகிறது என்று நினைக்கிறேன்.
சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பயன்படும் வகையில் தான் அந்த பதிவை வெளியிட்டேன். மற்றபடி எந்த நோக்கமும் கிடையாது.
டாக்டர் லிவர் டாக் பதிவு:
நான் சொன்ன முறையானது எனக்கு பலன் அளித்தது. அதனை ஒரு ஆப்ஷன் ஆகத்தான் சொன்னேன். எல்லா சிகிச்சைக்கும் ஆதரவாகவும் எதிராகவும் இரண்டு நிலைப்பாடுகள் இருக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக டாக்டர் லிவர் டாக் பதிவு ஒன்று மீண்டும் போட்டிருக்கிறார். அதில் அவர், நடிகை சமந்தாவின் மனம் புண்படும் வகையில் நான் குறிப்பிட்டு பேசவில்லை. அப்படி ஏதாவது குறிப்பிட்டு பேசியிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். சமந்தா எந்த ஒரு தவறான உள்நோக்கத்துடன் இதை செய்யவில்லை என்று எனக்கு தெரியும்.
Ms. Samantha Ruth Prabhu has responded to my "provocative" criticism of her endorsement of unscientific, pseudoscientific and baseless alternative medicine therapies by playing the victim card and endorsing more alternative practices.
— TheLiverDoc (@theliverdr) July 5, 2024
Please note, she is a serial offender in… https://t.co/eRvsXrGlZq pic.twitter.com/iRadZgrHTE
சமந்தா குறித்து சொன்னது:
இருந்தாலுமே, பிரபலமாக இருக்கும் சமந்தா தவறான மருத்துவமுறையை பற்றி கூறினால் அது பிரபலமாகி பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் நான் கண்டிக்க வேண்டியிருந்தது. நான் பல ஆண்டுகளாகவே சோசியல் மீடியாவில் தவறாக பரவி வரும் மருத்துவத்தை குறித்து மக்களிடம் தெளிவுபடுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த போராடி வருகிறேன். அதனால் தான் இது போன்ற தவறான மருத்துவ முறைகள் மக்களிடம் பரவுவதை தடுக்க கொஞ்சம் கடுமையாக பேச வேண்டி இருந்தது . மற்றபடி நடிகை சமந்தாவை மருத்துவம் பற்றிய அறிவு இல்லாதவர் என்று குறிப்பிட்டு, அவரை காயப்படுத்துவது என் நோக்கம் கிடையாது. பிரபலமாக இருப்பவர்கள் அதிக கவனத்துடன் எதையும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.






