தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகை குஷ்பூ. இவர் நடிகை மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பின்னர் இவர் 90களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து இருந்தார். அதோடு சினிமா உலகில் 90 களின் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு.

மேலும், ரசிகர்கள் குஷ்பு மீது உள்ள பற்றின் காரணமாக அவருக்கு கோவில் ஒன்று கட்டி உள்ளார்கள். இவர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து உள்ளார். தற்போது குஷ்பூ படங்களில் குணச்சித்திர வேடங்களிலும்,சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் குஷ்பூ அவர்கள் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். குஷ்பு மற்றும் சுந்தர் சி தம்பதியருக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகளும் இருக்கிறார்கள்.
குஷ்பூ குறித்த தகவல்:
இவர்கள் இருவரும் குஷ்புவை போல மிகவும் குயூடாக பப்லியான தோற்றத்தில் தான் இருந்தார்கள். இதனால் இவர்கள் உருவத்தை வைத்து பல முறை பலரும் கேலி கிண்டல்கள் செய்து இருந்தார்கள். பின் குஷ்பூ மகள்கள் உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறி இருந்தார்கள். குஷ்புவின் மகள் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்றார். இவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வமும் இருப்பதால் கூடிய விரைவிலேயே இவர் சினிமாத்துறையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இன்னொரு மகள் அனந்திகா தயாரிப்பாளராக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, குஷ்பூ- சுந்தர் சி மகளுடைய திருமண செய்தி தான் கடந்த சில வாரங்களாகவே சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

குஷ்பூ மகள் திருமணம்:
அதாவது அவந்திக்காவிற்கு தான் தற்போது ஜூன் 25 ஆம் தேதி கல்யாணம் நடக்க இருக்கிறது. இவரின் கல்யாணம் கோவாவில் நடக்கிறது. அவந்திகாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் ஷ்ரவன் சீனிவாசன். இவர் கப்பலில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார். இது முழுக்க முழுக்க காதல் திருமணம். இவர்களுடைய காதலுக்கு குஷ்பூ- சுந்தர் சி பச்சைக்கொடி காட்டிவிட்டார்கள். குஷ்பூ வீட்டு மாப்பிள்ளை சென்னையில் தான் வசிக்கிறார். மத்திய அரசின் கப்பல் துறையில் மரைன் இன்ஜினியராக ஷ்ரவன் சீனிவாசன் வேலை பார்க்கிறார். அவருடைய தந்தை சீனிவாசனும் கப்பல் துறையில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

திருமணம் பற்றிய விவரம்:
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் விஜய் என முக்கியமான பிரபலங்களுக்கு மட்டும் நேரில் சென்று அழைப்பு கொடுத்து வருகிறார்கள். இந்த திருமணத்தில் மொத்தம் 25 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்களாம். இது தொடர்பாக குஷ்பு குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள்பேட்டியில், அவந்திக்காவிற்கு கூட்டம் பார்த்தாலே அலர்ஜி. யாருக்கும் சொல்லாமல் பேசாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யலாம் என்று தான் சொன்னார்கள். சுந்தர் சி, குஷ்புவும் வற்புறுத்தி கோவாவில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்கள். திரைப்பட உலகைச் சேர்ந்த யாருக்குமே அழைப்பிதழ் கொடுக்காதது ஆச்சரியம். சென்னையில் திடீரென வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






