தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தமன்னா. தமிழில் இவர் ‘கேடி’ படத்தில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகை தமன்னா. ஆனால், அதற்கு முன்பாகவே இவர் 2005 ஆம் ஆண்டு இந்தி படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதன் பிறகு இவர் தமிழில் பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா, விக்ரம், விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார்.

இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என பிற மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். அதிலும் சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கில் வெளியான “பாகுபலி” படத்தின் மூலம் தான் நடிகை தமன்னாவிற்கு சினிமா மார்க்கெட் எங்கேயோ சென்றது. அதற்கு பின் இவர் தமிழில் பெரிதாக நடிக்க வில்லை.தமன்னா அவர்கள் ஹிந்தியில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதோடு இவர் கவர்ச்சி பாடல்களிலும் நடித்து வருகிறார். மேலும் சினிமா துறையில் நுழைந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக தமன்னா திகழ்ந்து இருப்பதால் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.
தமன்னா பேட்டி:
அதில் அவர், நான் நடனமாடிய பாடல்களை வெறும் ஐட்டம் சாங்ஸ் என்று சொல்லாமல் பார்ட்டி சாக்ஸ் என்று பார்க்கிறேன். கரீனா கபூர், கத்ரீனா கைஃப் போன்றவருடைய ஹிட் பாடல்களைப் போல, சில திரைப்படங்களை விடவும் இத்தகைய பாடல்கள் மக்களிடம் நீண்ட காலம் நிலைத்து நிற்கிறது. கவர்ச்சி என்பது கேமராவிற்கு மட்டும் செய்வது அல்ல. அது என் இயல்பான ஆளுமையின் ஒரு பகுதி. என்னுடைய பாடல்களை நான் ரசித்து நடனமாடி இருக்கிறேன். ஹிந்தி திரையுலகில் நடிகர்கள் தங்களுக்கு பிடித்தமான ஒரு குறிப்பிட்ட பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கும் வாய்ப்புள்ளது.

பாலிவூட் சினிமா பற்றிய நிலை:
பாலிவுட்டில் இரண்டு வகையான நடிகர்கள் இருக்கிறார்கள். கலைநயமிக்க கதைகளை தேர்ந்தெடுப்பவர்கள் குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் வணிகரீதியான கிளாமர் பாடல்களில் நடிப்பதில்லை. ஹிந்தி துறையுலகம் நடிகர்களுக்கு இந்த தேர்வு சுதந்திரத்தை அளிக்கிறது. அதேவேளையில் கலை மற்றும் வணிக ரீதியான படங்களை சமமாக கையாள்பவர்களை அங்கு தவிர்க்க முடியாத சூப்பர் ஸ்டார்களாக மாறுகிறார்கள். தென்னிந்திய திரை உலகம் பெண்களை பார்க்கும் விதமே எப்போதும் வேறு. பெண்களுக்கு சாதகமாகவோ அல்லது கண்ணியமாகவோ இருப்பதில்லை.

தென்னிந்திய திரை உலகம்:
நான் தென்னிந்திய சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்திலேயே மக்கள் ஏன் இதை பற்றி இப்படி எல்லாம் பேசுகிறார்கள்? ஏன் இப்படி வெவ்வேறு விதமாக பேசினார் என்பதை புரிந்து கொண்டேன். அது ஒரு விதமான பார்வை. அதில் ஆண் ஆதிக்கப்போக்கும் நிலவும். குறிப்பாக பாடல்களில் அதை நான் உணர்ந்திருக்கிறேன். வணிக ரீதியிலான வெற்றியை மட்டுமே முதன்மையாக பார்க்கிறது. இதை நான் என் தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாக சொல்கிறேன். 15 ஆண்டுகள் வரை நீண்ட பயணத்தை கொண்டுள்ள நடிகைகள் பெரிய சவால்களை சந்திக்கிறார்கள். அவர்கள் நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை திறமையை நிரூபிக்க வேண்டி உள்ளது. அதை வணிகரிதியான பாடல் மற்றும் காட்சிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டி உள்ளது. இந்த இரண்டையும் சமநிலையில் கையாண்டு சந்தித்த ஒரு நடிகை தனித்துவமான ஸ்டார் அந்தஸ்து பெறுகிறார். அப்படி கிடைத்தவர்கள் தான் வெற்றிகரமாக பலம் பெறுகிறார்கள் என்று கூறி இருக்கிறார்.






