நியூசிலாந்தில் இத்தனை ஆண்டுகள் தொன்மை வாய்ந்த மணியில் தமிழ் – பாட்டுக்கு பாட்டு அப்துல் அமீத் வெளியிட்ட சுவாரசிய தகவல்

0
492
- Advertisement -

நியூசிலாந்தில் உள்ள அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருக்கும் மணியில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நியூசிலாந்தில் உள்ள அருங்காட்சியகத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணி ஒன்று இருக்கிறது. அதில் தமிழ் எழுத்துக்கள் குறிக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இது தொடர்பாக மூத்த அறிவிப்பாளர் பி எச் அப்துல் ஹமீட் கூறியிருப்பது, நியூசிலாந்து தகவல் பொருள் அருங்காட்சியகத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மணி ஒன்று தற்போது வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழ் எழுத்துக்கள் இருக்கிறது. அதை கையால் தொட்டுப் பார்க்க எனக்கு அனுமதி கொடுத்திருந்தார்கள். அதுவும் கையுறை அணிந்து கொண்டு தான் இந்த மணியை பார்த்தேன்.

- Advertisement -

இந்த மணியின் வயது 15 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலம் என்று ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்ட ஒரு பாய்மரக் கப்பல் புயலில் சிக்கிக்கொண்டது. அப்போது அந்த கப்பலின் சிதிலங்கள் கரை ஒதுங்கியது. ஒரு மரத்தின் வேருக்குள் சிக்கிக்கொண்டிருந்த இந்த வெண்கல மணியை நியூசிலாந்தின் ஆதி குடிகளான மௌரி இனத்தினர் கண்டெடுத்திருந்தார்கள்.

இது என்னவென்று தெரியாமல் அவர்கள் உணவு தயாரிக்க இதன் அடியில் நெருப்பு மூட்டி உருளைக்கிழங்குகளை வேக வைக்க பயன்படுத்திருந்தார்களாம். அதற்கு நீண்ட காலத்திற்குப் பிறகு 1899 ஆம் ஆண்டு இதனை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்திருக்கின்றார்கள். அதற்குப் பின்னி இந்த வரலாற்றுச் சின்னத்தை அருங்காட்சியத்தில் வைத்து பாதுகாத்து வந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த மணி 166 மில்லி மீட்டர் உயரமும், 155 மில்லி மீட்டர் சுற்றளவும் கொண்டது. மேலும், இந்த மணியில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் எந்த மொழி? எந்த நாடு? என்று கண்டுபிடிக்க நிறைய ஆராய்ச்சிகள் நடைபெற்றது. அப்போது இது தமிழ்நாடு எனவும், மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான நாகப்பட்டினத்தில் இருந்து புறப்பட்டு வந்த கப்பலின் மணி என்றும் தெரிய வந்திருக்கிறது.

இந்த மணியில் முகைய்யத் தீன் பாகசுடைய கப்பல் மணி என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியரும் தம்முடைய தாய் மொழி தமிழை தான் தம்முடைய மொழி அடையாளமாக கருதி கப்பலில் எழுதி இருக்கிறார். வாணிபத்தில் சிறந்து விளங்கிய நம் தொன்மைத் தமிழரின் அடையாள குறியீடாக தமிழ் எழுத்துக்களை கண்ணுற்ற போது பெருமையால் நெஞ்சில் நிமிர்ந்தது என்று கூறியிருக்கிறார். தற்போது அந்த மணியின் உடைய புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement