தமிழகத்திற்கு இன்று வருகை தரும் குடியரசு தலைவர். ஆஸ்கர் புகழ் பெற்ற தம்பதியை சந்திக்க உள்ளார்.   

0
1031
- Advertisement -

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாட்கள் பயணமாக தமிழகத்திற்க்கு வருகை தர உள்ளனர். இன்று முதுமலை அடுத்துள்ள மசினகுடிக்கு வருகை தர உள்ளார். பின்னர் அவர் தொப்பக்காட்டில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிற்கு செல்ல உள்ளார். அதன் பின்  ஆஸ்கா் விருது பெற்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரா்ஸ்’ குறும்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியைச் சந்திக்கிறார். முதலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் கர்நாடக மாநிலம் மைசூர்க்கு செல்ல உள்ளார் அதன் பின் அங்கிருத்து ஹெலிகாப்டர் மூலம் முதுமலைக்கு செல்கிறார். ஆகையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

-விளம்பரம்-

மேலும் முகாமில் உள்ள 12 வளர்ப்பு யானைள் வரிசையாக நிறுத்திவைக்க பட உள்ளது. பாமா பொம்மி என்ற யானைகளுக்கு உணவு அளிக்க உள்ளார். அங்கு வசிக்கும் அங்குள்ள பழங்குடியினரிடம் பேச உள்ளார் எனவும் தெரிவிக்க பட்டுள்ளது.அங்குள்ள யானையின் பாகன்களிடம் பேச உள்ளார்.   மாலை 5 மணிக்கு அங்கு இருந்து புறப்படும் திரௌபதி முர்மு, மீண்டும் காரில் மசினகுடிக்கு வந்து அங்கிருந்து மைசூர்க்கு ஹெலிகாப்டரில் புறப்பட உள்ளார்.

- Advertisement -

அங்கிருந்து தனி விமானத்தின் மூலம் இரவு 6.50 மணிக்கு சென்னை சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் குடியரசு தலைவரை ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் குடியரசு தலைவரை வரவேற்க உள்ளனர். பின் அங்கிருந்து கார் மூலம் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு செல்ல உள்ளார். ஞாயிற்று அன்று சென்னை பல்கலைகழகத்தின் 165 பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளார். அதன் பின் திங்கள் அன்று அவர் புதுச்சேரிக்கு சென்று அங்கு நடக்கவிருக்கும் விழாக்களில் கலந்துகொள்ள உள்ளார். ஆகஸ்ட் 8 அன்று மாலை 6.05 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி க்கு புறப்பட்டு செல்ல உள்ளார்.

பலத்த பாதுகாப்பு          

குடியரசு தலைவரின் வருகையொட்டி பலத்த பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தொரப்பள்ளி – தெப்பக்காடு சாலை, பந்திப்பூா் – தெப்பக்காடு – மசினகுடி சாலை பகுதிகளில் அதிரடிப் படையினா், நக்ஸல் தடுப்புப் படையினா், காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். குடியரசுத் தலைவா் வந்து செல்லும் வரை தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய 3 மாநில எல்லையில் உள்ள சாலைகள் மூடப்படுகின்றன.

-விளம்பரம்-

மேலும் அவர் சென்னைக்கு வரும் அவருக்கு பலத்த பாதுக்காப்பு 5 அடுக்கு பாதுக்காப்பு வழங்கபட்டுள்ளது. அண்ணாபல்கலை  கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பலத்த பாதுகாப்பிற்கு பிறகே அவர்கள் அனுமதிக்கபடுவார்கள் என்றும் காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.    

Advertisement