“விரைவில் எய்ம்ஸ் மருத்துவனை பணிகள் முடிக்கப்படும் அதை 2026 ஆம் ஆண்டு பிரதமர் திறந்து வைப்பார்” – அண்ணாமலையின் நம்பிக்கை.

0
1147
- Advertisement -

தமிழகத்தில் விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும் அதற்க்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாதயாரையில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைச்சர் மூர்த்தி மீது குற்றம்சாட்டினார். ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. அதில் இன்று மதுரையில் உள்ள கிழக்கு மற்றும் வடக்கு தொகுதிகளில் நடைபயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

-விளம்பரம்-

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி .வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா. பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார் .6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

- Advertisement -

மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை:

மதுரை உள்ள கிழக்கு மற்றும் வடக்கு தொகுதிகளுக்கு உட்பட்ட செல்லூர் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளில் நடைபயணத்தை மேற்கொண்டார். அங்கு எதிர்கட்சிகளின் கூட்டம் குறித்து பேசுகையில் குள்ளநரிகள் எல்லாம் கூட்டமாக கூட்டணி என்ற பெயரில் சத்தமிட்டு கொள்கிறது என்றார். திமுகவின் குடும்பம் ஊழல் சகாப்தத்தை உருவாக்கி கொண்டுள்ளது என்றும் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகிய மூன்றும் தான் திமுகவின் சொத்து என்றும் அவர் கூறினார்,

-விளம்பரம்-

உலக பொருளாதரத்தில் ஐந்தாவது இடத்தில் நாம் இருக்கின்றோம் விரைவில் மூன்றாவது இடத்திற்கும் முன்னேறவும் என்றும் அவர் கூறினார். எய்ம்ஸ்மருத்துவமனை விரைவில் கட்டும் முடிக்கப்படும் என்றும் அதனை 2026 ஆம் ஆண்டு பிரதமர் திறந்து வைப்பார் எனவும் அண்ணாமலை கூறினார்.       

Advertisement