அண்ணாமலையின் பாதயாத்திரை – உ.பி முதல்வர் உட்பட 9 மத்திய அமைச்சர்கள் வருகை. யார் யார் தெரியுமா?

0
1112
- Advertisement -

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையில் பங்குபெறும் உத்தரபிரதேசதின் முதலமைச்சர் மற்றும் 9 மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள வருகிறார்கள். ஜூலை 27 அன்று தொடங்கபட்ட பாதயாத்திரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. இந்த பாதயாத்திரையை சிறப்பிக்கும் வகையிலும் இதற்க்கு பலம் சேர்க்கும் வகையிலும் மத்திய அமைச்சர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொள்ள உள்ளனர்.

-விளம்பரம்-

- Advertisement -

பாதயாத்திரை:

தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார். இதில் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 6 மாதங்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரையில் அண்ணாமலை 225ஊர்களில் மக்களை சந்திக்க உள்ளார்.

பாதயாத்திரைக்கு இடையில் பேசிய மாநில தலைவர் அண்ணாமலை நரேந்திர மோடியை மூன்றாவது முறை பிரதமரக்குவோம் என்றும் கூறினார். மோடி என்ன செய்தார் என்ற புத்தகத்தை வெளியிடுவதாக அவர் கூறியிருந்தார். மேலும் இதில் தொடக்க நாளில் கலந்து கொண்டு பாதயாத்திரை தொடங்கி . வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஊழல்வாதிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும், திமுக காங்கிரஸ் ஒட்டு கேட்டு வந்தால் அவர்களுக்கு 2ஜி ஊழல் நிலக்கரி பற்றி தான் அவர்களுக்கு நியாபகம் வர வேண்டும் என்று கூறி அவர் பாதயாத்திரை தொடங்கி வைத்தார்.

-விளம்பரம்-

பாதயாத்திரையில் பங்குபெறும் அமைச்சர்கள்:

இதில் மத்திய அமைச்சர்கள் மட்டுமின்றி உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி அதித்ய நாத்தும் பங்குபெற உள்ளதாக அரசியல் வட்டரங்கள் கூறுகின்றது. இந்த பாதயாத்திரை 5 கட்டங்களாக நடைபெற்ற உள்ளது. முதற்கட்டமாக தென் மாவட்டங்களில் 22 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் பொது 10 இடங்களில் பிரமண்ட பொது கூட்டங்கள் நடைபெறள்ளது. அக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்ற 10 அமைச்சர்கள் வருகை தர உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாதயாத்திரையின் நிறைவு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இறுதி உரையாற்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் சிங் யாதவ், பியூஸ்கோயல், பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர்கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள்

Advertisement