ஆடியோ லான்ச் தான் இல்லன்னு பாத்தா, இப்போ ட்ரைலருக்கு வந்த சிக்கல் – போலீசார் வைத்த செக்.

0
738
- Advertisement -

லியோ படத்திற்கு மேலும் மேலும் சிக்கல்கள் வந்த வண்ணமே தான் இருக்கிறது. தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. அந்த படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி தடை குறித்து தான் தற்போது பேசபட்டு வருகிறது. அந்த வகையில் மேலும் லியோ படத்துக்கு மேலும் ஒரு தடங்கல் ஏற்பட்டு உள்ளது.

-விளம்பரம்-

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இன்று நடிகர் அர்ஜுனன் பிறந்தநாள்.

- Advertisement -

இதனால் லியோ தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்டு இருக்கிறது. அதில் படத்தில் அர்ஜுன் நடித்திருக்கிற ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திர பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். தற்போது லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சி தடைக்கு திமுக அரசு தான் காரணம் உதயநிதி தான் காரணம் என்றும் பலரும் கூறி வந்தனர் அந்த நிலையில் தான் பழைய டிவீட் ஒன்று வைரலாகி வருகிறது.

ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள்

இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி தடை அளித்ததற்கு பலரும் எக்ஸ் தளத்தில் விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ஆனது 30 ஆம் தேதி நடைபெற இருந்தது இதற்காக சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டு வந்தனர் அந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பில் இசை வெளியீட்டு விழாவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

-விளம்பரம்-

டிரைலருக்கும் சோதனை:

எப்போதும் பெரிய நடிகர்களின் டிரைலர் வெளியானால் அது ரோகிணி திரையரங்கத்தின்பார்க்கிங் ஸ்கிரீன் செய்யப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும். அதுபோலத்தான் நாளைக்கு விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது அதை திரையரங்கின் வாகனங்களை நிறுத்துமிடத்தில் காட்சியளிக்க கோயம்பேடு உதவி ஆணையரிடம் அனுமதி கூறியிருந்தனர் அதற்கு அவர்கள் இது போன்ற நிகழ்ச்சி நடத்தினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

சுட்டிக்காட்டி தாங்கள் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கோரிக்கையை மறுத்துள்ளார். வேண்டுமென்றால் சென்னை காவல் ஆணையம் அலுவலகத்தில் இதனை கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார் எனறும் தகவல்கள் வெளியேறி உள்ளது. இதுவும் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்க்கு பின் நிலையில் அரசியல் காரணங்கள் உள்ளதா என்றும் பலர் விவாதம் செய்து வருகிறனர்.

Advertisement