அஜித்தால் சிம்பு படத்துக்கு வந்த சோதனை.! VRV படத்தை நிராகரித்த திரையரங்கம்.!

0
488

சிம்பு தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இந்த ட்ரைலர் திருப்திகரமாக இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதே போல இந்த படத்திற்காக சிம்பு தனது பேனருக்கு பாலபிஷேகம் பண்ணுங்க என்று கூறியதும் சிம்பு மீது பலருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதனை அடுத்து பேட்டியளித்த சிம்பு, பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார். இவை அனைத்தும் படத்தின் விளம்பரத்திற்காக தான் செய்கிறார் என்று ஒரு தரப்பு சிம்பு மீது குற்றச்சாட்டை வைத்து வருகிறது.

இவை அனைத்தும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகரிக்க செய்தாலும். நெல்லையில் உள்ள மதுரம் திரையரங்கம் சிம்பு படத்திற்கு பதிலாக அஜித்தின் விஸ்வாசம் மற்றும் ரஜினியின் பேட்ட படத்தை தான் திரையிட போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமே இந்த இரண்டு படங்களும் இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.

-விளம்பரம்-
Advertisement