மேடை மேடையா கஷ்டபட்டு சம்பாதிச்சதுங்க.! கண்கலங்கிய இமான் அண்ணாச்சி.!

0
773
Imman-Annachi
- Advertisement -


சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்றதும் நம் நினைவிற்கு முதலில் வருவது இமான் அண்ணாச்சி தான். தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருபவர் இமான் அண்ணாச்சி. இவர் சொலுங்கண்ணே சொல்லுங்க ,குட்டிஸ் சுட்டிஸ் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

-விளம்பரம்-
Related image

சென்னை அரும்பாக்கம் ராஜீவ்காந்தி நகரில் உள்ள இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை மாயமாகியுள்ளது. வீட்டில் ஆட்கள் இருந்த நிலையில் பீரோவில் இருந்த நகைகளை காணவில்லை என இமான் அண்ணாச்சி புகார் அளித்துள்ளார்.

இதையும் பாருங்க : அரைகுறை அம்மணியாக மாறி வரும் பிரியா பவானி ஷங்கர்.! ஏன் இப்படி மாறிட்டாங்க.! 

- Advertisement -

தனது வீட்டில் கொள்ளைபோனது குறித்து பேசியுள்ள இமான் அண்ணாச்சி,
என் வீட்டில் உள்ள பீரோவுக்கு இரண்டு சாவி உண்டு. இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு சாவி தொலைஞ்சிடுச்சு. அடுத்த ஆறு மாசத்துக்குள்ள 3 பவுன், 1 பவுன்னு நகைகள் காணாமப் போச்சு. வீட்டுல இருந்தவங்கள சந்தேகப்பட முடியல. உடனே பீரோ இருந்த ரூம்ல சி.சி.டி.வி. கேமரா மாட்டினேன்.

கேமரா மாட்னாதில இருந்து ஒன்றரை வருஷத்துக்கு எந்தத் திருடும் போகல. இப்ப, திடீர்னு 41 பவுன் கொள்ளை போயிருக்குறது அதிர்ச்சியா இருக்குது. ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க சார். அதான் கஷ்டமா இருக்குது. நிச்சயமா என் நகைங்க திரும்ப வந்திரும்னு நம்பிக்கை இருக்குது” என்று கண் கலங்கியவாறு கூறியுள்ளார் இமான் அண்ணாச்சி.

-விளம்பரம்-
Advertisement