உத்தமவில்லன் பஞ்சாயத்து : கமல் சாரை கேட்க திருப்பதி பிரதர்ஸூக்கு உரிமை இல்லை – தயாரிப்பாளர் ஆதங்கம்

0
139
lingusamy
- Advertisement -

நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ படத்தின் இசை வெளியீடு விழாவில் தயாரிப்பாளரும், குணச்சித்திர நடிகருமான தேனப்பன், திருப்பதி பிரதர்ஸ் குறித்து பேசியது திரை உலகில் இப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”காதலா காதலா” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமான தேனப்பன் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரிப்பதில் பெயர் பெற்ற தயாரிப்பாளர்.

-விளம்பரம்-

மைக்கேல் கே. ராஜா இயக்கத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கும் படம் தான் ‘போகும்இடம் வெகுதூரமில்லை’. ஆடுகளம் நரேன், தீபா சங்கர் ,கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் செல்லும் பயணத்தை மையமாக கொண்ட இப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ மக்களிடையே வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இசை வெளியீடு விழாவில் தேனப்பன்:

இப்படத்தின் இசை வெளியீடு விழாவில் தேனப்பன், தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரச்சினையாக பேசப்படுவது உத்தம வில்லன் பஞ்சாயத்தும், மைக்கேல் ராயப்பன் பிரச்சனையும் தான். இவர்கள் இரண்டு பேரையும் வைத்து நான் படம் பண்ணி உள்ளேன் அதனால் எனக்கு பேசுவதற்கு உரிமை உள்ளது என்றார். மேலும் கமலை வைத்து திருப்பதி பிரதர்ஸ் உத்தமவில்லன் படம் எடுத்தபோது நான் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் செயலாளராக இருந்தேன் என்றும் அந்தப் பிரச்சினை நடக்கும் போது நடிகர் கமல் கடிதத்தில் கையெழுத்து போட்டு கொடுத்தது உண்மைதான் என்றும் கூறியிருந்தார்.

lingusamy

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், அப்படம் வெளியாக பணம் போட்டது ‘ஈராஸ்’ நிறுவனம் தான், திருப்பதி பிரதர்ஸ் ஒரு ரூபாய் கூட போடவில்லை என்றார். பிறகு அந்த பணத்தை செட்டில் செய்தது ஞானவேல் ராஜாதான், அதனால் அவருக்கு கேள்வி எழுப்ப உரிமை இருக்கிறது என்றும் திருப்பதி பிரதருக்கு இல்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

-விளம்பரம்-

கமல் சாருக்கு என் சப்போர்ட்:

மேலும், மதுரை அன்புச் செழியனுக்கு சப்போர்ட்டாக பலர் பேட்டி கொடுத்தது போல் கமலுக்காக யாரும் பேசவில்லை என்பதே எனக்கு வருத்தம் என்றார். நான் கமலை வைத்து மூன்று படங்கள் தயாரித்து உள்ளேன் எனவும் ,ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலில் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளேன் அதனால் என் சப்போர்ட் அவருக்குத் தான் என்றார்.கடந்த 2015 ம் ஆண்டு மே மாதம் கமல் தேதி தருவதாக சொன்னார் ஆனால் திருப்பதி பிரதர்ஸால் பணம் ரெடி பண்ண முடியவில்லை என்பதுதான் உண்மை என்று கூறினார்.

கமலை பேசுவதற்கு தகுதி வேணும்:

அதன் பிறகு இவர்களே கமலிடம் முடியாது என்று சொல்லி வேறு நிர்வாகத்திற்கு தேதி கொடுக்க சொல்லிவிட்டனர், அப்போதே அது முடிந்து விட்டது. இப்போது திரும்பத் திரும்ப கமல் போன்ற நடிகரை வெச்சி செய்வது சங்கடமாக இருக்கிறது என்றும் கமலை குறை கூறுவதற்கு முன் எல்லாருக்கும் செட்டில் செய்து விட்டு பேசுங்கள் என்று திருப்பதி பிரதர்ஸை கோபத்தோடு கேட்டுக்கொண்டார். முன்னதாக, உத்தம வில்லனின் தோல்வியால் கமலை மீண்டும் ஒரு படம் நடித்து தர வேண்டும் என்று திருப்பதி பிரதர்ஸ் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement