40 வயதை நெருங்கியும் திருமணத்திற்கு நோ சொல்லும் தென்றல் சீரியல் நடிகை ஸ்ருதி.

0
7622
shruthi
- Advertisement -

பிரபல சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் அவர்களுக்கு தற்போது 40 வயதாகியும் திருமணம் வேண்டாம் என்று சொல்லி வருகிறார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இப்போது வளர்ந்து வரும் காலத்தில் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு ரசிகர்கள் சின்னதிரை நடிகர்களுக்கும் உள்ளார்கள். மேலும், படங்களை பார்க்கிறார்களோ? இல்லையோ? தொலைக்காட்சி தொடர்களை தவறாமல் பார்க்கிற காலமாக தற்போது மாறிக் கொண்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் குடும்பத்துப் பெண்களுக்கு பொழுதுபோக்கே இந்த சீரியல் தொடர் தான். அந்த வகையில் மக்கள் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் 1995 ஆம் ஆண்டு மலையாள மொழி படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

thendral serial shruthi raj க்கான பட முடிவு

- Advertisement -

1996 ஆம் ஆண்டு தளபதி விஜயின் நடிப்பில் வெளியான மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு சினிமா துறையில் பல படங்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அது மட்டுமில்லாமல் இவர் மக்களிடையேயும் அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லை. இதனால் இவர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். நடிகை ஸ்ருதி ராஜ் அவர்கள் முதன்முதலாக சின்னத்திரையில் தேவயானி நடித்த கோலங்கள் என்ற தொடரில் தான் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : காதலிக்காக உடல் எடையை குறைத்த கேப்டன் மகன். ஓகே சொன்ன கேப்டன். நிச்சயதார்த்த புகைப்படம் இதோ.

அதற்கு பிறகு சன் டிவி, விஜய் டிவி,ஜீ தமிழ் என எல்லா சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் சன் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த தென்றல் சீரியலில் துளசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், தென்றல் துளசி என்றால் இப்போது கூட யாராலும் மறக்க முடியாது. அதனால் தென்றல் சீரியலை மீண்டும் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அந்த அளவிற்கு தென்றல் சீரியல் மக்கள் இடையே அதிக வரவேற்பையும், பாராட்டையும் பெற்றார். அதற்கு பிறகு அபூர்வ ராகங்கள், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், ஆபீஸ் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
தொடர்புடைய படம்

சின்னத்திரை தொடர்களில் முன்னணி நடிகையாக உள்ளார் ஸ்ருதி ராஜ். அதுமட்டுமில்லாமல் இவருடைய அழகுக்கும், நடிப்புக்கும் என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது இவர் “அழகு” சீரியலில் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் பல குடும்பப் பெண்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார். இப்படி பல வருடங்களாக வெள்ளித்திரை சின்னத்திரை என நடித்து கொண்டு இருந்தாலும் அவருடைய இளமை ததும்பும் முகமும், அழகும் அவருக்கு 40 வயதை காட்டி கொடுக்காமல் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சொன்னால் யாராலும் நம்பவே முடியவில்லை. தற்போது இவருக்கு 40 வயதுக்கு மேலாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், இப்போ கூட எனக்கு திருமணம் வேண்டாம் என்று சொல்லி வருகிறார். இதனால் ரசிகர்கள் எல்லாம் பல கேள்விகளை இணைதளங்களில் எழுப்பி வருகின்றனர். இதனால் ரசிகர்கள் எல்லாரும் வருத்தத்தில் உள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

Advertisement