வாவ், 12 ஆண்டுகள் கழித்து இனைந்த தென்றல் சீரியல் ஜோடி தீபக் – சுருதி. என்ன சீரியல் ? எந்த சேனலில் தெரியுமா ?

0
2966
thendral
- Advertisement -

தொலைக்காட்சித் தொடரில் நடித்த பல்வேறு நடிகர் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கின்றனர். அந்த வகையில் பிரபலநடிகரும், தொகுப்பாளருமான தீபக்கும் ஒருவர். நடிகர் தீபக் 1999 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜென்மம் எக்ஸ் என்ற திகில் தொடரில் நடித்திருந்தார். அதன்பின்னர் சன் டிவி ஜெயா, டிவி ராஜ் டிவி போன்ற பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்து வந்தார். இவர் நடித்த பல்வேறு தொடர்கள் பெரும் வெற்றியையும் கண்டது. ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடர் தான்.

-விளம்பரம்-

2009 ஆம் ஆண்டு தொடங்கி 6 வருடங்கள் ஓடிய இந்த தொடர் 1340 எபிசோடுகளை கடந்தது.அண்ணி, கீதாஞ்சலி, மனைவி, செல்வி, பந்தம், அரசி, திருமதி செல்வம், ரோஜா கூட்டம் என்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் தீபக் அதேபோல தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார் இவர் நடித்த தென்றல் தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது இந்த தொடருக்காக சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார் நடிகர் தீபக்.

இதையும் பாருங்க : ‘அந்த கொழந்தையே நீங்க தான்’ தன்னுடைய சிறுவயது புகைப்படத்திற்கு வந்த மீம் குறித்து சிபிராஜ்ஜின் ரியாக்ஷன்.

- Advertisement -

தொலைக்காட்சி நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் தீபக் தொகுப்பாளராகவும் இருந்து வந்தார்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றிவந்த தீபக், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் இதுமட்டுமல்லாது நடிகர் தீபக் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.. மேலும், இவர் கதாநாயகனாக நடித்த இவனுக்கு தண்ணில கண்டம் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. நடிகர் தீபக் இறுதியாக கேப்டன் தொலைக்காட்சியில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘காதல்’ என்ற சீரியலில் நடித்தார் தீபக்.

அதன் பின்னர் வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீரியலில் களமிறங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற தொடர் மூலம் தான் தீபக் மீண்டும் சீரியலில் ரீ – என்ட்ரி கொடுக்க இருக்கிறீராம். இந்த தொடரில் தென்றல் தொடரில் தீபக்கிற்கு ஜோடியாக நடித்த ஸ்ருதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். ஆனால், இந்த சீரியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை.

-விளம்பரம்-
Advertisement