சென்னையில் கொடூரம். வெட்டி கொலை செய்யப்பட்ட தேன்மொழி சீரியல் நடிகர்.

0
9243
thenmozhi
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ‘தேன்மொழி பி.ஏ. ஊராட்சி மன்றத் தலைவர்’ தொடரில் நடிக்கும் துணை நடிகர் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்த ஜாக்லின் கதாநாயகியாக நடித்து வரும் தேன்மொழி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் தான்.

-விளம்பரம்-

இந்த தொடரில் ஜாக்லினுக்கு ஜோடியாக சித்தார்த் நடித்துள்ளார். இவர்களுடன் உஷா எலிசெபத், பி.ஆர்.வரலட்சுமி, அஞ்சலி பிரபாகரன், அஷ்ரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடரில் துணை நடிகராக நடித்திருப்பவர் சென்னை எம்.ஜி.ஆர் நகர் வள்ளல்பாரி தெருவில் வசித்து வந்த செல்வரத்தினம் (45). இலங்கைத் தமிழரான இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. நடிப்பதோடு மட்டுமல்லாமல் இவர் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் வீடு உள் கட்டமைப்பு காண்ட்ராக்டர் வேலை செய்து வந்துள்ளார். 

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இன்று (நவம்பர் 15) அதிகாலை 6.30.மணியளவில் மர்ம நபர்களால் வெடிக்கொள்ளப்பட்டுள்ளார். இன்று காலை சென்னை அண்ணா மெயின் ரோடு பகுதிக்கு ஆட்டோவில் செல்வரத்தினம் வீட்டிற்கு வந்த 4 பேர் அவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதில் செல்வரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். செல்வரத்தினரத்தை கொலை வெறியுடன் வெட்டிய அந்த 4 பேரும் அந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

சென்னையில் விஜய் டிவி சீரியல் நடிகர் வெட்டிக் கொலை

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.ஜி.ஆர். நகர் காவல்துறையினர் செல்வரத்தினம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் ரியல் எஸ்டேட் மற்றும் வீடு உள்கட்டமைப்பு வேலையில் ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக இந்தக் கொலை நடந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement