விஜய் 63 படத்தில் இணைந்த தெறி பட நடிகர்.! இன்று விஜய்யுடன் நடித்த அனுபவம்.!

0
844
Vijay-63

சர்க்கார் படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் தனது 63 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் நடிகை நயன்தாரா.

Vijay-63

மேலும், இந்த படத்தில் விவேக், கதிர், யோகிபாபு போன்ற பல்வேறு நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்முரமாக நடந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க பாடல் ஆசிரியர் விவேக் பாடல் வரிகள் எழுதுகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தை பற்றிய மற்றுமொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அது என்னவெனில் இந்த படத்தில் மேலும் ஒரு முக்கிய நடிகர் கமிட்டாகியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமார் நண்பராக வரும் சௌந்தர ராஜா என்பவர் தான். இவர் ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் உடன் இரண்டாவது முறையாக இணைகிறார் நடிகர் சௌந்தரராஜா.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தளபதி 63 படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் அர்த்தமுள்ள கதாபாத்திரமாக அமைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குனர் அட்லி அண்ணனுக்கு நன்றி. விஜயுடன் இன்று நான் நடித்த அனுபவத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்

-விளம்பரம்-
Advertisement