நடிகர் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இது அட்லீ மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படமாகும். இதற்கு முன்பாகவே இவர்கள் இருவரது கூட்டணியில் தெறி , மெர்சல் என்ற இரண்டு மாபெரும் வெற்றிப் படங்கள் வெளியாகியிருந்தன.
இதில் அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் முதன் முறையாக வெளியான ‘தெறி ‘திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா நடித்து இருப்பார்.
இதையும் பாருங்க : முதன் முறையாக தனது இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரஜின்.!
மேலும், எமி ஜாக்சன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன் என்று பலர் நடித்த இந்த படத்தில் பிரபல நடிகையான மீனாவின் மகள் பேபிநைனிகா நடித்திருந்தார். தமிழில் மாபெரும் ஹிட் அடித்த இந்த படம் தற்போது இலங்கையில் சிங்கள மொழியில் ரீ மேக் செய்யப்ட்டுள்ளது.
அதன் ட்ரைலர் தற்போது வர, அதை பார்த்த ரசிகர்கள் செம்ம கோபத்தில் உள்ளனர், இதை விட மோசமாக யாராலும் தெறி படத்தை ரீமேக் செய்ய முடியாது என கருத்துக்கள் கூறி வருகின்றனர். அந்த கொடுமையை நீங்களே பாருங்களேன்.